twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுமையின் வித்தகன்.. பார்த்திபனின் ஹிட் திரைப்படங்கள்.. ஒரு பார்வை !

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகரும் பிரபலமான இயக்குனராக உள்ளவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் இயக்குனர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

    புதிய பாதை, உள்ளே வெளியே, ஹவுஸ்ஃபுல், இவண், குடைக்குள் மழை, வித்தகன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மேலும், இவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' மூலமாக மீண்டும் ஒரு புதுமையான முயற்சியை செய்துள்ளார். அதன் வெற்றி உலக அளவில் இவரின் பெயரை தரம் உயர்த்தி உள்ளது.

    கிட்டத்தட்டட 60க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பார்த்திபன். பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றிக்கொடிகட்டி, அழகி, தென்றல்,ஆயிரத்தில் ஒருவன் என படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து, எதிலும் ஒரு புதுமையை புகுத்தும் வித்தியாச விரும்பி பார்த்திபனின் ஹிட் திரைப்படங்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்..

     ஆழமான காதல்

    ஆழமான காதல்

    பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நச்சென்று பொருந்தி நடித்திருந்தார் பார்த்திபன். சீதாவின் வாழ்வில் இவர் குறுக்கிட்டு அவரின் வாழ்க்கையை சீரழிக்கிறார். தன் வாழ்க்கையை கெடுத்தவனை ஒரு பெண் தேடிச்சென்று அவரை திருமணம் செய்வது என்ற ஒரு பிற்போக்குத் தனமான ஒரு கருத்தை இப்படம் கூறி இருந்தாலும் அன்பு அனைத்தையும் மாற்றக்கூடியது என்ற ஒரு ஆழமான காதலை இப்படம் புகுத்தி இருக்கும். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதும், ஒரு மாநில விருதையும் பெற்று மக்களின் ஏகோபித்த மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது.

     எதார்த்தத்தின் உச்சம்

    எதார்த்தத்தின் உச்சம்

    கிட்டத்தட்ட 60க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பார்த்திபன். பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றிக்கொடிகட்டி, அழகி, தென்றல்,ஆயிரத்தில் ஒருவன் என படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து, எதிலும் ஒரு புதுமையை புகுத்தும் வித்தியாச விரும்பி பார்த்திபனின் ஹிட் திரைப்படங்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்..

     பல மொழியில் ரீமேக்

    பல மொழியில் ரீமேக்

    ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன், அஜித்குமார், தேவயானி போன்றவர்களின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த படம் தான் நீ வருவாய் என. ராணுவ வீரரான அஜித் கார் விபத்தில் இறந்துவிட, அவரின் கண்ணை எடுத்து பார்த்திபனுக்கு வைத்து விடுவார்கள். ஆனால், அஜித்குமாருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த தேவயானி பார்த்திபனை மிக நெருக்கமாக இருந்து பார்த்துக் கொள்வார். இதனால் பார்த்திபனுக்கு தேவயானி மேல் ஒரு தலை காதல் ஏற்பட்டு கதை நகருகிறது. இறுதியில் வித்தியாசமான ஒரு கிளைமெக்ஸ் காட்சியுடன் கதை முடிவடைகிறது. சூப்பர் ஹிட்டான இப்படம் வெற்றி பெற்றதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

     மிடுக்கான நடிப்பு

    மிடுக்கான நடிப்பு

    பார்த்திபன் ஒரு திரை அரங்கத்தின் உரிமையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒருநாள் அரங்கினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் செய்தி வர காவல் அதிகாரிகள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தெரியாமல் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நினைக்கின்றனர். அரங்கினுள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரம், அரங்குக்கு வெளியே நிற்கும் அவரது காதலியாக சுவலட்சுமி என படம் விறுவிறுப்பாக நகர்கிறது. இறுதியில் அரங்கில் தள்ளு-முள்ளு நெரிசல் என கதை வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருக்கும் இப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இதில் திரையரங்க உரிமையாளராக மிடுக்காக நடித்திருப்பார் பார்த்திபன்.

     அழகான அவஸ்தை

    அழகான அவஸ்தை

    அழகி நிறைய இளைஞர்களை பாதித்த திரைப்படம். மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமல் மனதை ஆட்கொள்ளும் காதலும், காலாகாலத்துக்கு அது செய்கின்ற அவஸ்தைதான் அழகி. படம் முழுக்க இளையராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா, பாட்டு சொல்லி பாட சொல்லி போன்ற பாடல்களை பார்த்து பரவசமடையாத காதலர்களே இல்லை என்று சொல்லலாம். சண்முகமாக வரும் பார்த்திபனின் இயல்பான நடிப்பு, கணவனாக, காதலனாக அவர் படும் மன வேதனையை தனது ஒவ்வொரு அசைவின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார் பார்த்திபன்.

     வித்தியாசமான காதல்

    வித்தியாசமான காதல்

    சமூக அக்கறையுள்ள ஒரு எழுத்தாளனின் மீது ஒரு வாசகி கொண்ட அன்பு காதலாகி, தாயை இழந்தபின் தங்க இடம் தேடித் திரிகையில் அந்த எழுத்தாளனுக்கே தன்னைக் கொடுத்து அவன் குழந்தைக்குத் தாயுமாகிறாள். அவன் முன்னேற்றத்துக்குத் தடையாகி விடுவோம் என்ற எண்ணத்தில் யாரிடமும் உண்மையைச் சொல்லாமலே மகனை வளர்த்து வருகிறார். இறுதியில் எழுத்தாளனுக்கு உண்மை தெரிந்து வாசகியைத் தேடும்போது அவள் இறந்து விடுகிறாள். அவள் சாவுக்குப் பின் மகனுக்காக வாழ்கிறார் அந்த எழுத்தாளர். எழுத்தாளர் கதாபாத்திரத்தில் மிகவும் ஒன்றி தனக்கே உரித்தான பணியில் அழகாக மெருகேற்றி இருப்பார் பார்த்திபன்.

     புதுமை புகுத்தி

    புதுமை புகுத்தி

    ராஜாவாக வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறது ஒத்த செருப்பு சைஸ் 7. காவல் நிலையத்தில் பார்த்திபனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த விசாரணையில் பல கொலைகளை பார்த்திபன் செய்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. இந்த கொலைகளை ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்று சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், அவர்கள் அனைவருக்கும் சேர்த்து பார்த்திபனே நடித்து இருக்கிறார். கேமரா பார்த்திபனை மட்டுமே காட்டுகிறது. ஆனால், அவர் ஒருவர் அனைத்து கதாபாத்திரங்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். வித்தியாசமான கதையில் ஒரு புதுமையை புகுத்தி உள்ளார் புதுமையின் வித்தகன் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

    English summary
    A round up on versatile Actor Parthiban Hit Movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X