விரைவில் ‘புதிய பாதை 2‘..சிம்பு சம்மதித்தால் உடனே படபிடிப்பு.. பார்த்திபன் சொன்ன சூப்பர் நியூஸ் !
சென்னை : பார்த்திபனின் புதிய முயற்சியில் முழுப்படத்தையும் சிங்கிள் டேக்கில் எடுத்துள்ள இரவின் நிழல் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
Recommended Video
இப்படத்தில், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரியங்கா ரூத், ப்ரிகிடா சகா, ஆனந்த்கிருஷ்ணன் என பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து கொண்டு மிகவும் அற்புதமான ஓர்படத்தை கொடுத்திருக்கிறார்.
இரவின் நிழல் படத்தை மொத்தமாக 96 நிமிடங்கள் எடுத்துள்ளார் பார்த்திபன். 96 நிமிடங்கள் படத்தை ஒரே டேக்கில் உருவாக்கியுள்ளார். படத்தில் முதலில் 30 நிமிடம் படம் உருவான கதை ஒரு சிறு தொகுப்பாக காட்சிப்படுத்தபடுகிறது.

இரவின் நிழல்
இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் பார்த்திபன், படத்தை உருவாக்க பட்ட கஷ்டம் மற்றும் படம் எப்படி உருவானது என அனைத்தையும் மிகவும் அழகாக கூறியுள்ளார். அதில், சினிமாவிற்கு வந்து 32 வருஷம் ஆச்சு புதியபாதை போல படத்தை கொடுத்திருந்தாலும், ஒத்தசெருப்பு திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், இந்த படத்திற்கு என்ன பண்ண வேண்டும், மக்களை எப்படி பார்க்கவைப்பது என்ற போராட்டம் உள்ளது.

அழகான டைட்டில்
ஜெயிலர், வாரிசு தலைப்பு வைத்தாலே பெரிய நடிகர்களின் படம் ஓடிவிடும் ஆனால், இதுபோன்ற படங்களுக்கு தலைப்பு ரொம்ப முக்கியம். மனதை தூண்டுவது போலவும், தூண்டில் போடுவது போலவும் வேறவேற விஷயம் தேவைப்படுகிறது. அப்படி யோசித்த போது வந்த பெயர் தான் இரவின் நிழல், இரவிற்குள் ஒரு கண்ணுக்கு தெரியாத ஓர் வெளிச்சம் உள்ளது. அதுதான் இரவின் நிழல் என்று படத்தின் தலைப்புக்கு அழகாக விளக்கம் அளித்தார்.

கமர்ஷியல் படம்
இரவின் நிழல் திரைப்படத்தில் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் டாப் ஹீரோக்கள் நடித்திருந்தால் இந்த படத்தின் விலையே மிகவும் பெரிதாக இருந்து இருக்கும். ஜாலியா நான்கு பாட்டு.. ஒரு டான்ஸ்னு ஒரு பெரிய நடிகரை வெச்சு படம் எடுக்கும் பிளான் இருக்கு. ஆனால், ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்களை எடுத்துள்ளதால், கமர்சியல் படம் எடுத்தால் கூட அதுவும் வித்தியாசமாக இருக்கும் என்றார்.

புதியபாதை 2
தொடர்ந்து பேசிய பார்த்திபன் சிம்புவை வைத்து புதியபாதை 2 எடுக்கும் திட்டம் இருப்பதாகவும், சிம்பு ஒகே சொன்னால், அடுத்த மாதமே படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறிய பார்த்திபன் கூறினார். புதிய பாதை வந்த போது பல பெண்கள் அந்த கதையை விமர்சித்தார்கள். மீண்டும் விமர்சனம் இல்லாமல் கதையில் ஒரு பெரிய மாற்றத்துடன் புதிய பாதை ரீமேக் விரைவில் உருவாகும் என்றார்.


Click it and Unblock the Notifications











