நானும் ரவுடி தான் கணக்கா.. வான்டட்டா வந்து வண்டியிலேறிய பார்த்திபன்.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது என்கிற அறிவிப்புடன் நேற்று விடாமுயற்சி டிரெய்லர் வெளியானது. அந்த படத்தில் அஜித்தின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் அப்படியே லியோ பார்த்திபன் போல இருக்கிறதே என கமெண்ட் பண்ணாமல் பார்த்திபன் போல இருக்கிறதே என கமெண்ட் பண்ண நிலையில், நடிகரும் இயக்குநருமான நம்ம புதிய பாதை பார்த்திபன் ராதாகிருஷ்ணன் போட்ட ட்வீட் தான் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் பிரபல ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் தழுவல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த படம் 600 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு போட்டியாக நாமும் ஒரு ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்து பண்ணலாம் என்கிற முடிவுடன் தான் அஜித் குமார் மகிழ் திருமேனியை அணுகியுள்ளார் என்கின்றனர்.

vidamuyarchi parthiban leo

பிரேக்டவுன் எனும் ஹாலிவுட் படத்தை உரிய உரிமம் வாங்காமலே மகிழ் திருமேனி இயக்கிய நிலையில் தான் படம் பொங்கலுக்கு வரமுடியவில்லை என ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகி வந்த நிலையில், அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அடுத்த மாதம் படம் வெளியாவது உறுதி என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர்.

லியோ பார்த்திபன் போலவே: சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலை முதலில் வைத்து நடித்ததே அஜித் குமார் தான் என்றாலும், லியோ விஜய் போலவே நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் மாறியுள்ளதாக சில விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், அதில், தெரியாமல் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வந்து மாட்டிக் கொண்டது தான் தற்போது சோஷியல் மீடியாவையே வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

வசமாக சிக்கிய பார்த்திபன்: பார்த்திபன் ஹேர்ஸ்டைல், பார்த்திபன் டிரெஸ் கோட், பார்த்திபன் வெப்பன் என மொட்டையாக பார்த்திபன் என்று மட்டும் விஜய் ரசிகர்கள் ட்வீட் போட்ட நிலையில், அதை பார்த்த பார்த்திபன், "என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி பரணி.தரணி போற்றும் தனிப்பெரும் Style-க்குரியவர் AK.incomparable style-க்கு சொந்தக்காரர்,கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட,சில இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை 'அமர்க்களம்'சரண் அவர்களிடம் கூறினேன் பெருமையாக!!!" என ஒரு உருட்டு உருட்டிய நிலையில், அது லியோ பார்த்திபன்னு யாராவது அவருக்கு சொல்லி புரிய வைங்கப்பா என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X