For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இதை நான் ரகசியமாகவே வைத்துக்கொள்ள விரும்புகிறேன்'... நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்!

    |

    சென்னை: குப்பத்து ராஜா படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ், பாலக் லால்வானி, பார்த்திபன், யோகி பாபு மற்றும் பூனம் பஜ்வா நடித்துள்ள படம் குப்பத்து ராஜா. எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை, பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது.

    Actor Parthiban on Kuppathu Raja

    குப்பத்து ராஜா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து பேட்டியளித்த நடிகர் பார்த்திபன், குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிப்பதாகக் கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிக்கிறேன், முக்கியமாக ஜி.வி.பிரகாஷுடன் தான் என் மோதல்கள் இருக்கும். இதை பற்றி சொன்னால், நான் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா என்ற ஒரு கேள்வி எழலாம். அதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது.

    ப்ரியங்கா, நிக் விவாகரத்து பெறுகிறார்களா?: தங்கை பரினீத்தி விளக்கம்

    எல்லோரும் ஜிவி பிரகாஷ் இசை மாயாஜாலத்தை கண்டு பிரமித்து போவார்கள். ஆனால் அவரின் உள்ளார்ந்த நடிப்பு திறன்களை கண்டு வியந்தேன். பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பை அவர் மிக சாதாரணமாக வழங்கியதை நான் பார்த்தேன். கூடுதலாக, சண்டைக் காட்சிகளில் நிறைய முன்னேறியிருக்கிறார். இந்த படத்தில் அது குறித்து அதிகம் விவாதிக்கப்படும்" என்றார்.

    குப்பத்து ராஜா படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Speaking on his upcoming film Kuppathu raja, actor Parthiban says, “I play the role of a Kingpin in a slum area and my clashes would be predominantly with GV Prakash. Having said this, there could be a literal sense of guesses on whether I’m playing negative role. This I would like to keep it under wraps.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X