Ponniyin selvan 2 - பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆயிரம் குறைகள் - பார்த்திபன் ஓபன் டாக்
சென்னை: Ponniyin selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் பார்த்திபன் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். முதல் பாகம் மெகா ஹிட்டாகி 500 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதனையடுத்து படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது.

பொன்னியின் செல்வன் 2: முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதே எதிர்பார்ப்போடு படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படை எடுத்து செல்கின்றனர். படம் பார்த்த அவர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர்.
வசூல் நிலவரம்: முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினரும், ரசிகர்களும் இருந்தனர். அந்த நம்பிக்கை பொய்த்துபோகாதபடி முதல் இரண்டு நாள்களிலேயே படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதேசமயம் சில இடங்களில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வரலாறை மாற்றினாரா மணிரத்னம்: மேலும் நாவலில் இருக்கும் பல விஷயங்கள் படத்தில் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸில் மணிரத்னம் வரலாறை மாற்றியிருக்கிறார் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் காட்டமாக தங்களது விமர்சனத்தை முன் வைத்தனர்.

பார்த்திபன் கருத்து: இந்நிலையில் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கத்தான் செய்யும் ஒரு நல்ல வசூலை கொடுத்திருக்கிறார் மணிரத்னம் அதனால் அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். ஒரு நாவலை படமாக எடுக்கும் போது முழுமை பெறாததுதான். மேலும் ஒரு வரலாற்று நாவலில் க்ளைமாக்ஸை மாற்றியது முறையானது இல்லைதான்.
எவ்ளோ ரிஸ்க்?: இருந்தாலும் இது அவரின் புனைவு என்றுதான் என் பக்கம் கூறுவேன்இது கோபால ரத்தினத்தின் செல்வன் கதை, பொன்னியின் செல்வன் கதை இல்லை, இது மணிரத்தினத்தின் புனைவு இந்தக் கதையை ஏன் இவ்ளோ வருஷம் எடுக்க முடியாமல் போனத 13 எபிசோடுகளாக எடுக்க வேண்டிய கதையை இரண்டு பாகங்களாக கொடுக்க வேண்டுமென்றால் அதில் எவ்ளோ ரிஸ்க் இருக்கிறது" என கூறினார்.


Click it and Unblock the Notifications











