நாத்தம் குடிக்க.. நாசமா போவாதீக.. டாஸ்மாக் திறப்பு பற்றி..பார்த்திபன் சாட்டையடி!
சென்னை : நடிகர் பார்த்திபன் தனது பாணியில் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை எழுதி பதிவிட்டுள்ளார். அது பலரும் ரசிக்கும் படி உள்ளது.
Recommended Video
வித்தியாசம் என்றால் பார்த்திபன், பார்த்திபன் என்றால் வித்தியாசம் தான். பேச்சிலும், எழுத்திலும் தனக்கென ஒரு ஸ்டைலைக் கொண்டவர். அவரிடம் இருக்கும் இந்த வித்தியாகமான சிந்தனைதான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.
அவரது கதைகளிலும் சரி, கருத்துக்களிலும், பேச்சிலும் சரி ஏதோ ஒரு வித்தியாச சிந்தனை தொற்றிக்கொண்டே இருக்கும். இவரது வித்தியாசமான படைப்புகளால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

வெற்றிப்படங்கள்
ஆரம்ப காலங்களில் பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் அவருடன் இணைந்து சுமார் 20 படங்களில் பணிபுரிந்துள்ளார். அதே நேரத்தில் பல ஆர்டிஸ்டுகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இவர் 15 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை ஹவுஸ்புல், புதிய பாதை, ஒத்த செருப்பு சைஸ் 7 போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார்.

திறமையான நடிகர்
இவர் திரைப்படங்கள் இயக்குவதை தாண்டி ஒரு சிறந்த நடிகராவார். 1981ல் வெளியான இராணுவ வீரன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன் அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த அழகி, வெற்றி கொடி கட்டு, நீ வருவாயென, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் மக்களிடையில் அவரை ஒரு திறமையான நடிகர் என்ற பெயரை பெற்றுத்தந்தது.

வித்தியாசமான முயற்சி
சமீபத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் தமிழ் சினிமாவை தாண்டி உலகெங்கிலும் பேசப்பட்டது. படம் முழுக்க ஒருவராலேயே சொல்லப்பட்டாலும் திருப்பங்களும் முடிச்சுகளும் கதையை சுவாரசியமானதாக மாற்ற சிறப்பாக உதவியுள்ளன. "நைட் எல்லாம் தூங்காம என்ன பண்ணுவீங்க? - முழிச்சிருப்பேன்" போன்ற பார்த்திபனின் குறும்பு வசனம், இசை போன்றவை அந்த படத்திற்கு மேலும் உயிர் கொடுத்தது. பார்த்திபனின் வித்தியாசமான முயற்சிக்கு சால்யூட்.

முகநூல் பதிவு
பார்த்திபன் இவர்கள் சமூக வலையதளங்களில் அழகாய் எழுதி பல பதிவுகளை போடுவார். அந்த வகையில் கொரோனா நேரத்தில் டாஸ்மாக் திறப்பதை பற்றியும் மிக அழகாக முகநூலில் எழுதியுள்ளார். அதை தன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் வழக்கம் போல அவரின் கவரும் வார்த்தை கோப்புகள் இருந்தன. அவர் எழுதியதாவது. நாளை நமதே'என நினைத்திருந்தேன் TASMAC திறக்கும் வரை. இனி doubt தான். Social DR(Istanc)KING! பாருங்க..எழுத்துக்களே கொளருது!Bottle மூடியைத் திறந்தாலே போதையேறிகளுக்கு. கடையைத் திறந்தா? Immunity & community நாசமாப் போகும்.

இனி ஊரடங்கா சட்டம்
"அவ 1 நாள் பட்டினியா இருந்தா,2 நாள் பட்டினியா இருந்தா,3 நாள் பட்டினியா இருந்தா ஆனா 4-வது நாள் அவளால பத்தினியா இருக்க முடியலை" ன்னு. அப்படி பசி வந்தா எதை வேணும்னாலும் விக்கலாமா? இன்னும் சில நாள் கண்டிப்பாக இருந்திருக்கலாம் milord. இதை நான் த(வ)ன்மையாகக் கண்டிக்கிறேன். இனி ஊரடங்கா சட்டம்!

அழகான பதிவு
ரசிகர்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.வழக்கம் போல இவரின் நய்யாண்டிதனமான எழுத்துக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது அது மட்டும் அல்லாமல் தனது இன்ஸ்டா பக்கத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் அவர் நடித்து பிரபலமாக பேசிய வசனத்தை கொஞ்சம் மாற்றி மிகவும் அழகாக அதைவிட்டு உள்ளார்.
மக்காள்!!!!
இன்னைக்கு மது'ரைக்கு போறவுக
நிச்சயம் மேலூரு'க்கு போவீக.
நாத்தம் குடிக்க - நாசமா போவாதீக. இந்த மாசமட்டுமாவது போவாதீக-உங்க
பொண்டு புள்ளைகளுக்காகவாது போவாதீக
புண்ணியமாப் போவுங்க! என்று முடித்துள்ளார் .


Click it and Unblock the Notifications











