"ஒரு இரவின் ஒளியில்...பத்து தலையுடன்“ சிம்புவை பாராட்டிய பார்த்திபன் ட்வீட்!

சென்னை : நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.

சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் பத்து தல.

இப்படத்தில் கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிலம்பரசன்

சிலம்பரசன்

தோல்வி படங்களில் நடித்து துவண்டு போயிருந்த சிம்புவுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது மாநாடு. டைம் லூப் முறையில் வெளியான இந்த படம் வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்தை அடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இதன் மூலம் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் பிடித்துள்ளார் சிம்பு.

முஃப்தி ரீமேக்

முஃப்தி ரீமேக்

2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் ரீமேக் படமான பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்து முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

டிசம்பரில் ரிலீஸ்

டிசம்பரில் ரிலீஸ்

பத்துதல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. திரையரங்குகளில் படம் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் வெளியாகும்.

ஒரு இரவின் ஒளியில்...பத்து தலையுடன்

ஒரு இரவின் ஒளியில்...பத்து தலையுடன்

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து "ஒரு இரவின் ஒளியில்...பத்து தலையுடன்! பத்து தலையின் மொத்த மூளையும் ஒத்த தலையில். விசேட திறமையை பெற்றவர். பெற்றவரிடமிருந்தும், தான் பெறும் அனுபவத்திலிருந்தும் கற்றவர். சந்திக்கும் போது மட்டும் இணையும் நாள் குறித்து சிந்திப்போம். இணையும் நாளில் வெற்றியை சந்திப்போம்". என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கப் போறீங்களா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X