சில்லுக்கருப்பட்டி ஒரு செலுலாயிட் கவிதை.. ஹலீதா ஷமீமை பாராட்டி தள்ளிய பார்த்திபன்!

சென்னை: சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்து இயக்குநர் ஹலீதா ஷமீமை பாராட்டித் தள்ளியிருக்கிறார் நடிகர் பார்த்திபன்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சிறந்த படைப்புகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஒரு கலைஞனாக எப்போதும் கொடுக்க தவறியதில்லை. தாமதம் ஆனாலும் கூட பாராட்ட வேண்டிய விஷயத்தை சரியாக பாராட்டி விடுவார்.

அந்த வகையில் சில்லுக்கருப்பட்டி படத்திற்காக இயக்குநர் ஹலீதா ஷமீமை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பார்த்திபன். சில்லுக்கருப்பட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலிதா ஷமீம்.

வரவேற்பு

வரவேற்பு

சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சில்லுக்கருப்பட்டி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த பலரும் ஹலிதாவை பாராட்டி தள்ளினர்.

தனது ஸ்டைலில்

தனது ஸ்டைலில்

இயக்குநர் சேரன், நடிகை சாய் பல்லவி, பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சில்லுக்கருப்பட்டி படத்தை தனக்கே உரிய ஸ்டைலில் பாராட்டியிருக்கிறார். மேலும் இவ்வளவு தாமதமாக படத்தை பார்த்ததற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

வருந்துகிறேன்

வருந்துகிறேன்

இதுதொடர்பான டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன். அதில், சில்லு கருப்பட்டி' ரொம்பவே அரிதான படம்! வைத்த கண் வாங்காமல் பார்க்க (இவ்வளவு தாமதத்திற்கு வருந்துகிறேன்/வருந்தினேன்) வைத்தார் இயக்குனர் ஹலிதா ஷமீம்!

உள்ளத்தைஹலீதா!

உள்ளத்தைஹலீதா!


நான்கு கதைகளையும் அதனதன் இயல்புடன் நேர்த்தியாக நெய்திருக்கிறார். இத்திரைக் கதையில் அவர் வைத்த நம்பிக்கைக்கே என் முதல் பாராட்டு. 5 வருட்களுக்கு முன்பே அவருக்கு ஒரு டைரக்டர் சேரை பரிசாக அளித்தேன், அப்பரிசு இப்படத்திற்கு தான். அவர் உள்ளத்தில் உள்ள காதலத்தனையையும் வெவ்வேறு காலத்தின் துணையோடு ஒரு செலுலாயிட் கவிதையாக்கி அதற்கு டிக்கட்டாக பார்வையாளர்களின்
"உள்ளத்தை அள்ளித்தா"எனக் கேட்டுப்பெறாமலே
உள்ளத்தை அள்ளிட்டா( ரசிகனின் குரல்)
உள்ளத்தைஹலீதா ! இவ்வாறு பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X