twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்

    |

    Recommended Video

    என் குடும்ப பிரச்சன இப்போ எதுக்கு |ACTOR PARTHIBAN |THITTAM POATTU THIRUDURA KOOTAM |FILMIBEAT TAMIL

    சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாயகன் மாசிலாமணியிடம் போலீஸார் மேற்கொள்ளும் விசாரணையின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் நீளம் கருதி சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. இவை படத்தின் விறுவிறுப்பை குறைக்கும் என்பதால் அவை நீக்கப்பட்டன. தற்போது நீக்கப்பட்ட காட்சிகளை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் மாசிலாமணியை விசாரணை செய்யும் அதிகாரி, ஒரு செய்தித்தாளை கொண்டுவந்து தூக்கிப்போட்டு, ச்சே இவ்வளவு கேவலமான வேலைய செய்றதுக்கா இந்த யூனிஃபார்ம் என்று எரிச்சலுடன் சொல்கிறார். தற்போது நீக்கப்பட்ட காட்சிகளை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

    Actor Parthiban released deleted Scene in Otha Seruppu size 7

    நடிகர் பார்த்திபன் சமீபத்திய முயற்சியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் கதையை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ளார். இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும், மக்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்த திரைப்படம் பார்த்திபன் என்ற தனிமனிதனின் அசாத்திய நடிப்புத் திறமையை மட்டுமே நம்பிக்கையோடு வைத்து உருவாக்கப்பட்ட திரைக்காவியமாகும். இந்த படம் பயோஸ்கோப் ஃபிலிம் நிறுவனத்தின் கீழ் நடிகர் பார்த்திபனே தயாரித்துள்ளார்.

    இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்று வருவதோடு வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கான அதிகாரப்பூர்வ நுழைவுக்கான போட்டிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    இந்த நிலையில் பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் திரைப்படம் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாயகன் மாசிலாமணியிடம் போலீஸார் மேற்கொள்ளும் விசாரணையின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இத்திரைப்படத்தின் நீளம் கருதி சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. இவை படத்தின் விறுவிறுப்பை குறைக்கும் என்பதால் அவை நீக்கப்பட்டன. அதில் மாசிலாமணியை விசாரணை செய்யும் அதிகாரி ஒரு செய்தித்தாளை கொண்டுவந்து தூக்கிப்போட்டு, ச்சே இவ்வளவு கேவலமான வேலைய செய்றதுக்கா இந்த யூனிஃபார்ம் என்று எரிச்சலுடன் சொல்கிறார்.

    அதற்கு பெண் போலீஸ், சார் பேப்பர் ஈரமாயிடிச்சி என்கிறார். பதிலுக்கு விசாரணை அதிகாரி, அது ஹைகோர்ட் ஜட்ஜ் காரி துப்புனதும்மா, என்கிறார். அதோடு, அரசியல்வாதிகளுக்கு காவல் துறை அதிகாரிகள் எல்லாம் கைகூலியா செயல்படுறாங்களாம்.

    அதுக்கு தான் ஜட்ஜ் கண்டனம் தெரிவிச்சிருக்காரு, என்கிறார். அப்புறம் காவல் துறை பொறுப்புடன் செயல்படணுமாம். எப்படி செயல்பட்றது, விட்டாத்தானே செயல்பட முடியும், என்று மேலும் காட்சி நீள்கிறது. தற்போது இயக்குனர் பார்த்திபன் படத்திலிருந்து நீக்கப்பட்ட இந்த காட்சியை வெளியிட்டுள்ளனர்.

    தொழில்நுட்ப முன்னணியில், இப்படத்தை ஒளிப்பதிவாளர் ராம்ஜி படமாக்கியுள்ளார், ஆர்.சுதர்சன் எடிட்டிங் துறையையும், ரசுல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பையும் பணியாற்றினார்கள். திரைப்படத்தின் பின்னணி ஸ்கோர் சி.சத்யா இசையமைத்திருந்தார்.

    English summary
    In the movie 'Otha Seruppu size 7', the investigating officer of Masilamani brings a newspaper and hangs up, saying that this is the only form of scandalous work. Actor Parthiban has released the currently deleted scenes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X