தரக்குறைவாக பேசிய நெட்டிசன்.. நச் பதிலடி கொடுத்த பார்த்திபன்! அப்ளாஸை அள்ளிக்கொடுத்த ரசிகர்கள்!

சென்னை: தன்னை தரக்குறைவாக பேசிய நெட்டிசனுக்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த அதிரடி பதில் அளித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் பிரபலமானவர் நடிகர் பார்த்திபன். இந்தப் படத்திற்காக தேசிய விருது வாங்கியிருக்கார் பார்த்திபன்.

தனது நடிப்பு தனது இயக்கம் என தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். நடிகர் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்திருக்கும் படம் ஒத்த செருப்பு. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளார் பார்த்திபன்.

கருத்து

கருத்து

நடிகர் பார்த்திபன் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக உள்ளார். தான் பார்க்கும் படங்கள், நடிகர்கள் குறித்தும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.

கோபத்தை கிளறும் கேள்வி

இந்நிலையில் டிவிட்டரில் உள்ள பார்த்திபனிடம் நெட்டிசன் ஒருவர் அசுரன் படத்தின் ட்ரெய்லர் குறித்து தரக்குறைவாக கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியை பார்க்கும் யாராயிருந்தாலும் நிச்சயம் கோபப்படுவார்கள். அப்படி ஒரு மாதிரியான கேள்வியை கேட்டிருக்கிறார் அந்த நெட்டிசன்.

தனக்கே உரிய பாணி

தனக்கே உரிய பாணி

ஆனால் அந்த நெட்டிசனுக்கு நடிகர் பார்த்திபன் தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். தன்னை மரியாதை குறைவாக ஒருமையில் போடா வாடா என்று பேசிய அந்த நபருக்கு மிகவும் மரியாதையாக பதில் கூறியுள்ளார்.

அசுரத்தனமா இருந்தது

பார்த்தேங்க சார், அசுரத்தனமா இருந்தது. தனுஷ் பர்ஃபாமன்ஸ் சூப்பர். இயக்குனருக்கு 6மணிக்கே மெசேஜ் அனுப்புனேங்க சார்! மற்றும்,'a journey of fakir' பாத்துட்டு (துட்டு குடுத்து) நான் கை தட்னது ஊருக்கே கேட்டுது! என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

ரசிகர்கள் வருத்தம்

அந்த நெட்டிசனின் கருத்தை பார்த்த ரசிகர்கள், பார்த்திபனிடம் இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து மரியாதையா பேசுங்க... நிச்சயமா நீங்க ரஜினி ரசிகரா இருக்க வாய்ப்பில்ல... எந்த ரஜினி ரசிகனும் இப்படி யாரையும் மரியாதை இல்லாம பேசி பாத்ததில்ல.. பார்த்திபன் சார்.. இவங்களுக்காக நான் வருந்துறேன்.. என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X