Parthiban: நகைகள் திருட்டு என புகார்.. மறுநாளே புகாரை வாபஸ் பெற்ற இயக்குநர் பார்த்திபன்!
சென்னை: நடிகர் பார்த்திபன் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கம். தயாரிப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருபவர். நீண்ட காலங்களாக சினிமாவில் தன்னை இணைத்து வருபவர். தன்னுடைய எதுகை மோனை பேச்சுக்களால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வரும் பார்த்திபன் வித்தியாசமான படங்களையும் அடுத்தடுத்து கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் டீன்ஸ் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் அடுத்தடுத்த படங்களை பார்த்திபன் இயக்கி வருகிறார். சென்னை நந்தனத்தில் வசித்துவரும் பார்த்திபனின் அலுவலகமும் கீழ் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

நடிகர் பார்த்திபன்: நடிகர் பார்த்திபன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். இவரது திரைப்பயணம் நீண்ட நெடிய பயணமாக கோலிவுட்டில் அமைந்து வருகிறது. தற்போது மற்ற இயக்குனர்களின் படங்களிலும் வில்லன். காமெடியன் என அடுத்தடுத்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். இவரது கேரக்டர்கள் அதிகமான கவனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் டீன்ஸ் என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்த 12 சவரன் நகைகளை காணவில்லை என நேற்றைய தினம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்திருந்தார்.
12 சவரன் நகைகள் திருட்டு: இதுதொடர்பாக தன்னுடைய உதவியாளர் கிருஷ்ண காந்த் என்பவர்மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை நந்தனத்தில் பார்த்திபனின் வீடு அமைந்துள்ளது. கீழ் தளத்திலேயே அவரது அலுவலகமும் அமைந்துள்ள நிலையில், தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பையில் 12 சவரன் நகைகளை வைத்திருந்ததாகவும் அதுதான் தற்போது மாயமாகி உள்ளதாகவும் பார்த்திபன் புகார் அளித்திருந்தார். அவரது அலுவலகத்தில் 10 பேர் வேலை செய்துவந்த நிலையில், அதில் 6 பேர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்தான் கிருஷ்ணா காந்த் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
புகார் வாபஸ்: இந்நிலையில் இன்றைய தினம் அந்த நகைகளை கிருஷ்ணா காந்த் திருப்பிக் கொடுத்து விட்டதால் புகாரை வாபஸ் வாங்கிக் கொள்வதாக பார்த்திபன் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். அவரது இந்த திடீர் ட்விஸ்ட் காவலர்களை மட்டும் இல்லாமல் ரசிகர்களையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. தன்னுடைய படங்களின் வித்தியாசமான கதைகளத்தால் கவனத்தை பெற்று வருபவர் நடிகர் பார்த்திபன். அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பார்த்திபன், தன்னுடைய ரோல்களின் வித்தியாசமான கேரக்டர்களால் கவனத்தை ஈர்த்து வருகிறார். தன்னுடைய பேச்சுக்களாலும் இவர் அனைத்து தரப்பினரையும் கலந்து வரும் நிலையில் தற்போது இவரது அலுவலகத்தில் நகைகள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த புகார்கள்: குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய புகாரை பார்த்திபன் ஏன் வாபஸ் பெற்றுள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை என்று பார்த்திபன் புகார் அளித்திருந்தார். அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக தன்னுடைய வீட்டில் நகைகள் திருடப்பட்டதாக பார்த்திபன் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










