twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்வராகவனுக்கும் மணிரத்தினத்திற்கும் உள்ள வித்யாசம் இதுதான்... பார்த்திபன் விளக்கம்

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்த வார இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

    படத்தை வெவ்வேறு ஊர்களுக்கு சென்று புரமோட் செய்யும் பட குழுவினர் தற்சமயம் டெல்லியில் உள்ளனர்.

    இந்நிலையில் இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் செல்வராகவன் இருவருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பார்த்திபன் கூறியுள்ளார்

    அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா?அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா?

    ஆயிரத்தில் ஒருவன்

    ஆயிரத்தில் ஒருவன்

    புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு செல்வராகவனால் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். அந்தப் படம் வெளிவந்த போது பலருக்கும் புரியவில்லை என்ற விமர்சனத்தால் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. ஆனால் வெளிவந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த படத்தை கொண்டாடத் துவங்கினர் ரசிகர்கள். இப்போது இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று கேட்கும் அளவிற்கு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பார்த்திபன் செயல்

    பார்த்திபன் செயல்

    வழக்கமாக தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர்கள் கண் சிமிட்டாமல் வசனம் பேச வேண்டும் என்பது செல்வராகவனின் யுக்தி. பல நடிகர்கள் தங்கள் பேட்டிகளில் இதனை கூறுவதை நீங்கள் கண்டிருக்கலாம். எத்தனை டேக் வாங்கினாலும் ஒரு முறை கண் சிமிட்டி விட்டால் கூட ரீடேக் கேட்பாராம். அப்படி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் மழை பெய்து கொண்டிருக்கும் போது கண் சிமிட்டாமல் நடிக்க முடியுமா சார் என்று பார்த்திபனிடம் கேட்டாராம் செல்வராகவன். பார்த்திபன் எந்த மறுப்பும் கூறாமல் சிறப்பாக நடித்தது தன்னை ஆச்சரியப்படுத்தியதாக கார்த்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

    விழாவில் கேள்வி

    விழாவில் கேள்வி

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக் குழுவினர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்கிற வரலாற்று படத்தில் நடித்துள்ளீர்கள். அதேபோல இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளீர்கள். இரண்டு படங்களுக்கும் இரண்டு இயக்குநர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பார்த்திபனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    செல்வராகவன் காட்டாரு

    செல்வராகவன் காட்டாரு

    அதற்கு பதிலளித்த பார்த்திபன், இயக்குநர் செல்வராகவன் ஒரு காட்டாரு போன்றவர். அவரை எந்த எல்லைகளுக்குள்ளும் அடக்கி விட முடியாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு டான்ஸ் மாஸ்டர் நடனம் சொல்லிக் கொடுக்க வந்தால் அதனையே மாற்றி இதுதான் டான்ஸ் என்று அவர்களுக்கு வேறு ஒன்றை செய்து காட்டி அதை நம்பவும் வைத்து விடுவார். நடன இயக்குநர்களுக்கே அப்படி என்றால் நடிகர்களை பற்றி யோசித்துப் பாருங்கள். இயக்குநர் மணிரத்தினம் பொறுத்தவரை அவர் ஒரு அட்டவணை போட்டு அதற்குள் இருக்க வேண்டும் என்று நடிகர்களுக்கு அறிவுருத்துவார். இருப்பினும் தனக்கு வேண்டியது கிடைக்கும் வரை மணிரத்தினம் அவர்களும் விட மாட்டார் என்று பார்த்திபன் அந்த நிகழ்வில் கூறியுள்ளார்.

    English summary
    Ponniyin Selvan Part- 1 is set to release this weekend, the anticipation for the film is on the rise. The film crew is currently in Delhi promoting the film in different cities. In this Situation, actor Parthiban revealed the difference between the two directors Mani Ratnam and Selvaraghavan in an press meet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X