twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அநாகரிகமாக நடந்து கொண்டேன்.. ஆனால், அதுக்காக செய்யல.. மன்னிப்பு கேட்டார் பார்த்திபன்!

    |

    சென்னை : நடிகர் பார்த்திபன் ரோபோ சங்கர் மீது மைக்கை தூக்கி வீசியதற்கு மனம் திறந்த மன்னிப்பு கேட்டுள்ளார்.

    Recommended Video

    வெறி அதிகமாச்சு | AR Rahman and Parthiban Conversation | Iravin Nizhal

    இரவின் நிழல் படம், நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.

    காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்ட கரண் ஜோஹர்.. இதயம் நொறுங்கிப் போன டிடி நீலகண்டன்!காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்ட கரண் ஜோஹர்.. இதயம் நொறுங்கிப் போன டிடி நீலகண்டன்!

    இரவின் நிழல்

    இரவின் நிழல்

    இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு முதல் பாடலை வெளியிட்டார். அப்போது மேடையில் நடிகர் பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உரையாடும் நிகழ்வின்போது, மைக் சரியாக வேலைச் செய்யவில்லை என பார்த்திபன் வேகமாக மைக்கை முன்வரிசையில் தூக்கி வீசியெறிந்தார். பார்த்திபனின் இந்த செயலால் மேடையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.

    வைரலுக்காக செய்தேனா?

    வைரலுக்காக செய்தேனா?

    பார்த்திபனின் இந்த செயல் ஊடகங்களில் பேசுபொருளானது. வைரலுக்காக பார்த்திபன் இப்படி நடந்து கொண்டார் என்றும், அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று செய்திகள் பரவின. இதையடுத்து, பார்த்திபன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன்.... இவ்வளவு அகங்காரம் தேவையா? என பல யூடியூபில் செய்திகள் வெளிவருகிறது.

    மன்னிப்பு கேட்டேன்

    மன்னிப்பு கேட்டேன்

    தூக்கி போட்டது மைக்... ஆனால், உடைந்தது என் மனசு என்று வருத்தத்துடன் பேசினார். வைரல் ஆக வேண்டும் என்பதற்காக நான் இதை செய்யவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அது என் மனதிற்குள் பல சங்கடத்தை ஏற்படுத்தியது. மேடையில் நடந்த அந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன்.

    அநாகரிகமான நடந்து கொண்டேன்

    அநாகரிகமான நடந்து கொண்டேன்

    சில தவறுகள் நடக்கும் போது அதை பின்னோக்கி சென்று சரி செய்ய முடியாது. ஒரு சிறு வயது பையனைப்போல நானே இறங்கி அனைத்து வேலையும் செய்யும்போது கோபம் எழுவது நியாயமானது. எனினும், மேடையில் அநாகரிகமான நடந்து கொண்டேன் அதனை நியாயப்படுத்த விரும்பவில்லை. நடந்த தவறுக்காக அனைவர் இடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    actor parthiban's apology to AR Rahman and Robo Shankar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X