twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா?

    |

    சென்னை: நடிகரும்,இயக்குநருமான பார்த்திபன் ஒத்த செருப்புன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்கார்.

    படத்தில் வரும் ஒரு வசனம் பத்தி, சத்யராஜ் மூணே முக்கால் நிமிஷம் புகழ்ந்து பேசியதா தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Actor parthibans dialogue creates debates

    அதாவது எல்லாரும் பொறக்கும்போது அம்மணமாத்தானே பொறக்குறோம். சிலர் மட்டும் ஏன் கோவணத்தோட பொறக்கணும்.. சிலர் மட்டும் ஏன் கோடீஸ்வரங்களா பொறக்கணும்னு போகுது அந்த வசனம்.

    Exclusive: நடிகர் சங்கத் தேர்தல்... விஷாலுக்கு எதிராக சிம்பு... ஆர்.கே.சுரேஷின் பக்கா பிளான்! Exclusive: நடிகர் சங்கத் தேர்தல்... விஷாலுக்கு எதிராக சிம்பு... ஆர்.கே.சுரேஷின் பக்கா பிளான்!

    இந்த வசனத்தை புகழ்ந்துதான் நடிகர் சத்யராஜ் மூணே முக்கால் நிமிஷம் பேசினாராம். சிலர் மட்டும் ஏன் கோடீஸ்வரரா பொறக்கணும்னு கேட்கறது கூட சரி..

    சிலர் மட்டும் ஏன் கோவணத்தோடு பொறக்கணும்னு கேட்கறது சரியா.. இப்படியும் ஒரு கேள்வி வருது. இந்த கேள்வியை விவேக்ன்னு ஒரு ஃபாலோயர் கேட்டு இருக்கார்.

    அதாவது பிறக்கும்போது எல்லாரும் ஆடை இல்லாமல்தான் பிறக்கின்றனர்.யாரும் கோவனத்துடன் பிறப்பதில்லை..கோடீஸ்வரர் உள்பட என்ன வசனமிது கருமத்தை சொல்ல இப்படி சொல்லி இருக்கார்.

    அப்துல் ரஹ்மான்னு ஒரு ஃபாலோயர், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தங்களை உருவாக்கிய ஆசான் திரு.பாக்கியராஜ் அவர்கள் தான் ஈன்ற பிள்ளைகளை விட உம்மை பெற்றதற்கு உளம் மகிழ்வார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    எது எப்படியோ.. ஒத்த செருப்பு படம் நல்லபடியா முடிஞ்சு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருந்தால் சரிதான்.

    English summary
    Actor and director Parthiban oththa seruppu has taken a picture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X