கட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்

கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் தன்னை அணுகியதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

ஈரோடு : அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தனது கட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாகக் கூறியதாகவும், ஆனால் தனக்கு அரசியல் தெரியாது என்பதால் அதனை மறுத்துவிட்டதாகவும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார் நடிகர் பார்த்திபன். சினிமாயணம் என்ற தலைப்பில் பேசிய அவர், தான் சினிமாவிற்கு வந்தது குறித்து உரையாற்றினார்.

அப்போது அவர், 'தன்னை அரசியலில் இறங்கச் சொல்லி கட்சித் தலைவர் ஒருவர் ரூ. 100 கோடி தர முன் வந்ததாக' கூறினார்.

மேலும் இது தொடர்பாக அந்த விழாவில் அவர் பேசியதாவது:-

அம்மா... சின்னம்மா..

அம்மா... சின்னம்மா..

சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆரம்பத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் தந்தை போஸ்ட் மேன் ஆக இருந்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா மிகவும் கண்டிப்பானவர். ‘அம்மா' என்றாலே கண்டிப்பானவர் தானே...? மேலும் எனக்கு சின்னம்மாவும் உண்டு. சின்னம்மா எப்படிபட்டவர் என்றும் உங்களுக்கு தெரியும். இப்படி அம்மா... சின்னம்மா கண்டிப்பில் நல்ல பிள்ளையாக வளர்ந்தேன். படித்தேன்.

நாகேஷ் ஷூட்டிங்:

நாகேஷ் ஷூட்டிங்:

என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் நான் ஷூட்டிங்கை பார்க்க போனேன். அப்போது நடிகர் நாகேஷ் நடித்த படம் எடுக்கப்பட்டது. இடைவேளை நேரத்தில் நாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். விசிறி வீசுவார்கள். செம கவனிப்பு கவனித்தார்கள்.

போஸ்ட்மேன் வேடம்:

போஸ்ட்மேன் வேடம்:

இதையெல்லாம் பார்த்த எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை ஏற்பட்டது. நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு போஸ்ட் மேன் வேடம் கிடைத்தது. என் அப்பாவும் தபால்காரர் தானே...? எப்படி பொருத்தமாக அமைந்திருந்ததை பாருங்கள்.

டைரக்டராகும் ஆசை:

டைரக்டராகும் ஆசை:

அதன் பிறகு எனது ஆசான் கே.பாக்யராஜிடம் சேர்ந்து அவருக்கு உதவியாளராக பணிபுரிந்தேன். நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு நடிப்பதை விட டைரக்டர் ஆக தான் விருப்பம் அதிகம். ஆனால் பல படங்களில் நடித்து விட்டேன்.

600 கோடி தேவை:

600 கோடி தேவை:

இப்போது என்னிடம் 60 கதைகள் உள்ளது. இவற்றை எல்லாம் படம் எடுக்கு 600 கோடி வேண்டும். இதற்கு நான் எங்கே போவேன்? அதே சமயம் இன்னொரு வி‌ஷயத்தையும் இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

மறுப்பு:

மறுப்பு:

அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன்.

தலைவர்கள் இல்லையே:

தலைவர்கள் இல்லையே:

இப்போது ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. காமராஜரை போல... ஒரு கக்கனை போல இனி தலைவர்கள் வருவது கஷ்டம்" என இவ்வாறு நடிகர் பார்த்திபன் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X