விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை.. அந்த சந்தேகம் எல்லாருக்கும் இருக்கு.. பார்த்திபன் சொல்றதை கேளுங்க!

சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் 150, 200 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட நிலையிலும் இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 69வது படத்தை முடித்துவிட்டு இதுவரை நடித்தது போதும், இத்தனை ஆண்டுகள் தனக்காக தமிழ்நாட்டு மக்கள் காட்டிய அன்புக்கு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அரசியல் தலைவராக மாறியுள்ளார்.

நேற்று வந்த அநாதைகள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் நாங்கதான் என்பது போல பேசி வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதே மறைமுகமாக விஜய்யை அட்டாக் செய்துதான் என சோஷியல் மீடியாவே கொதித்து வரும் நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

vijay thalapathy 69 parthiban

நடிகர் விஜய்க்கு அரசியல் எல்லாம் அவசியமே இல்லை. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் அதையெல்லாம் துச்சமாக உதறித் தள்ளிவிட்டு மக்களுக்கு ஏதோ செய்கிறேன் என வரும் போது அவரை ஆரம்பத்திலேயே நசுக்கி விட வேண்டும் என நினைப்பது எல்லாம் நியாயமே கிடையாது என பார்த்திபன் பேசியுள்ளார்.

இவங்க மட்டும் தான் ஆட்சி செய்யணும்: நம்ம நாடு ஒரு ஜனநாயக நாடு. இதில், இவங்கதான் ஆட்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்கள் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்றும் மக்களுக்காக உழைக்கக் கூடாது என்றும் சொல்லும் உரிமை யாருக்குமே இல்லை. புதுசா அரசியலில் மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு வரும் விஜய்யை வரவேற்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. அவரை காலி செய்யும் விதமான செயல்களை தவிர்த்தாலே போதும் என பார்த்திபன் பேசியுள்ளார்.

அந்த சந்தேகம் இருக்கு: பொதுவாக சினிமாவில் இருந்து சில நடிகர்கள் அரசியலுக்கு ஆர்ப்பாட்டமாக வருவார்கள். ஆனால், மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்றதும் மறுபடியும் அவர்கள் சினிமா பக்கமே திரும்பி விடுவார்கள். அரசியலில் அவர்கள் தொடர்ந்து மக்களுக்காக உழைக்க மாட்டார்கள். அதே போல விஜய்யும் செய்துவிடுவார் என்கிற சந்தேகம் சிலருக்கு இருந்தாலும், அதை நாம் முதலிலேயே சொல்லி சொல்லி செய்ய வருபவரையும் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று விஜய்யின் அரசியலை வரவேற்று பேசியுள்ளார் பார்த்திபன்.

நாளைய தீர்ப்பு: எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69வது படமாக உருவாகியுள்ள விஜய்யின் கடைசி படத்திற்கு நாளைய தீர்ப்பு என்கிற டைட்டிலையே வைத்துள்ளதாகவும் இந்த படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இல்லாமல் அரசியல் படமாகவும் ஆக்‌ஷன் படமாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகரும் நாளைய தீர்ப்பு டைட்டிலை உறுதி செய்துள்ள நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் லுக்கிற்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் யங் லுக்கில் வரப்போகிறாரா? அல்லது வயதான தோற்றத்தில் வரப்போகிறாரா? என்பதை பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமுடன் உள்ளனர். மேலும், தளபதி 69 படம் இந்த ஆண்டு வெளியாகுமா? அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸா? உள்ளிட்ட குழப்பங்களும் கிளம்பியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X