இதென்ன பார்டர் பரோட்டாவா? பங்கு போட்டு திங்க? சீனாவை மரண பங்கம் செய்த பிரபல நடிகர்!
சென்னை: பிரதமர் மோடி, மாமல்லபுரம் வந்த சீன அதிபருக்கு சிவப்பு நிற சால்வை வழங்கியதை வைத்து சீனாவை சாடியிருக்கிறார் பிரபல நடிகர் பார்த்திபன்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக்கில் எல்லை பிரச்சனை மூண்டுள்ளது. எல்லையில் படைகளை குவித்த சீனா, அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானானர்கள். சீன ராணுவத்திலும் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
"Donate Now! It can bring immediate relief to one child in need"

சின பொருட்களுக்கு எதிர்ப்பு
இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியர்கள் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பிரபல நடிகர்கள் பலரும் சீன பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.

பெருஞ்சுவரை உடைப்போம்!
அப்போது நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டியிருந்தார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில் இந்திய ராணுவ வீரர் பழனி + 19 பேருக்கும் வீர வணக்கம் செலுத்தும் விதமாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம்! என்று தெரிவித்திருந்தார்.

பட்டு சால்வை
அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று நடிகர் பார்த்திபன் மீண்டும் சீனாவை சாடி டிவிட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மாம்ல்லபுரம் வந்த போது சீன அதிபருக்கு, அவரது முகம் பதியப்பட்ட பட்டு சால்வையை பரிசாக வழங்கியதை வைத்து வைரலாகும் மீம்மை ஷேர் செய்துள்ளார்.

பங்கு போட்டு திங்க?
மேலும் அவரது ஸ்டைலில் அசத்தல் டிவிட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பொடவையே போனாலும்
பார்டரை வுட்டு குடுக்கக் கூடாது! இதென்ன பார்டர் பரோட்டாவா? பங்கு போட்டு திங்க? பார்டர் எவ்வளவு முக்கியம் என்பதை பாருங்கள் இந்த மெஸேஜில் பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பார்டர் பரோட்டா
பார்த்திபனின் இந்த மெஸேஜை பார்த்த நெட்டிசன்கள், அவரை பாராட்டி தள்ளியுள்ளனர். பலரும் உங்களின் டோனில் அதைப் படிப்பதாக தெரிவித்து வருகின்றனர். (டெல்லி) செங்கோட்டையை சொல்லும் சாக்கில் எங்கள் (தென்காசி)
செங்கோட்டையின் பார்டர் புரோட்டாவை நினைவு படுத்தி விட்டீர்கள்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











