மீண்டும் பூகம்பம்.. திரிஷா பற்றி.. திடீரென பார்த்திபன் வெளியிட்ட வீடியோ!
சென்னை: நடிகர் பார்த்திபன் த்ரிஷா குறித்து பேசியது இணையத்தில் சர்ச்சைக்குள்ளான நிலையில், திரிஷா பார்த்திபனை கடுமையாக கண்டித்து ஒரு பதிவினை போட்டிருந்தார். அதற்கு பார்த்திபன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிலையில், தற்போது வீடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரிஷா, விஜய் இருவரும் ஒரே காரில் ஜோடியாக சென்றது இணையத்தில் பேசு பொருளானது. இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபனிடம் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவின் புகைப்படத்தை காட்டி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, பேசிய பார்த்திபன் 'குந்தவை வீட்டிற்குள்ளேயே குந்து வைத்தால் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்' என பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதை வன்மையாக கண்டித்த திரிஷா, ஒருவரிடம் மைக் இருந்தால், அவர் பேசுவது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள் தனத்தையே வெளிப்படுத்தும், யாரை தரம் தாழ்ந்து பேசுகிறீர்களோ, அவரை விட பேசுபவரே அசிங்கமாக வெளிச்சம் போட்டு காட்டப்படுவார் என பதிவிட்டிருந்தார்.

வேகத்தில் சொல்லிவிட்டேன்: இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். அதில், நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் குந்தவை என கூச்சலிட்டனர். அப்போது குந்தவை குந்தவைத்து அமைதியாக இருக்கலாம் என வேகத்தில் சொல்லிவிட்டேன். கீழே வந்ததும், ரங்கராஜ் பாண்டே குந்தவையை தவிர்த்து இருக்கலாம் என்று சொன்னார். உடனே நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திரிஷா குறித்து பேசியதை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். ஆனால், அங்கிருந்த யாரோ எடுத்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது. இதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
திடீர் வீடியோ: இதைத்தொடர்ந்து, நடிகா் பார்த்திபன், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், த்ரிஷா நான் பாராட்ட நினைத்தேன், இந்த நேரத்தில், திரிஷாவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என வீடியோ வெளியிட்டுவிட்டு, அதே பதிவில், கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்... விடியலாக முழு வீடியோவே வரும் என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.


Click it and Unblock the Notifications











