என் தோளோடு தோளாக உடனிருந்து உற்சாகப்படுத்திய…ஊடக நண்பர்களுக்கு பார்த்திபன் நன்றி !

சென்னை : ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது பெற்றுள்ள நடிகர் பார்த்திபன், என் தோளோடு தோளாக, உடனிருந்து உற்சாகப்படுத்திய பத்திரிகையாளர்களுக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

ஒத்த செருப்புக்கு இன்னும் எத்தனை பெருமைகள் கிடைத்தாலும் அது உங்களையே சாரும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

பல விருதுகளை குறித்த ஒத்த செருப்பு திரைப்படம் 2 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு

சந்தேகத்தின்பேரில் ஒரு கொலைவழக்கில் பார்த்திபனை போலீசார் கைது செய்கிறது காவல்துறை. கொலைக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று காவல்துறை நினைக்கும் நேரத்தில் பார்த்திபன் ஏற்றுக்கொள்கிறார், ஒன்றல்ல, இரண்டல்ல நான்கு கொலைகளை. காவல்துறை ஆச்சர்யப்படும் சமயத்தில் ஐந்தாவதாக ஒரு கொலையைப் பற்றியும் பார்த்திபன் பேசுகிறார். இதனால், வழக்கு ஒட்டு மொத்தமாக திசைமாறி சென்றுவிடுகிறது. பார்த்திபன் எத்தனை கொலைகள் செய்தார், ஏன் செய்தார் என்பதே ஒத்த செருப்பு படத்தின் கதை.

வித்தியாச விரும்பி

வித்தியாச விரும்பி

எதிலும் வித்தியாசத்தை விரும்பும் வித்தியாச விரும்பியான பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் ஒருவர் மட்டுமே நடித்து, அவரே தயாரித்திருப்பார். உலக சினிமா வரலாற்றில், இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து வெளிவந்த படங்கள் வெறும் பன்னிரண்டுதான். பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது

ஒருவர் மட்டுமே

ஒருவர் மட்டுமே

ஒருவர் மட்டுமே நடித்திருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்த்த இப்படம், முதலில் திரையரங்கில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியானது. பல்வேறு விருதுகளை பெற்ற இத்திரைப்படம் சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் ஜூரி விருது என இருவிருதுகளை பெற்றது.

பத்தியாளர்களுக்கு நன்றி

பத்தியாளர்களுக்கு நன்றி

இந்நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி கூறி பார்த்திபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், என் தோல்விப் படங்கள், என்னுடைய வெற்றிப் படங்களைக் கணக்கிட்டால் வர்த்தக ரீதியாக எனது தோல்விப் படங்களே அதிகமாக இருக்கும். ஆனால், அதிலும் நான் ஏதாவது 'குடைக்குள் மழை' போல், சிறிய அளவிலாவது புதிய முயற்சிகளைச் செய்திருப்பேன். ஒத்தையடிப் பாதையிலிருந்து 'ஒத்த செருப்பு' வரை என்னுடைய பயணத்தை மிக இலகுவான நெடுஞ்சாலைப் பயணமாக்கியதில் பத்திரிகையாளர்களின் பங்கே அதிகம்.

Recommended Video

Superstar Rajinikanth Getting 51st DadaSaheb Phalke Award | 67th NATIONAL FILM AWARDS
என் தோளோடு தோளாக

என் தோளோடு தோளாக

சில நேரங்களில் என் படங்கள் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போகும் காலங்களில் கூட, எனக்குப் பத்திரிகைகள் ஊக்கம் தந்திருக்கின்றன. எனது முயற்சிகளைப் பாராட்டியுள்ளன. தற்போது தேசிய விருது வாங்கும் அளவிலான படத்தைச் செய்வதற்கு என் தோளோடு தோளாக, உடனிருந்து உற்சாகப்படுத்தியது அவர்கள்தான். இப்போதுதான் வெற்றியை நோக்கிய எனது பயணம் தொடங்கியிருக்கிறது.

பத்திரிக்கையின் பாராட்டு

பத்திரிக்கையின் பாராட்டு

ஒவ்வொரு படமும் செய்யும் போது அதை எனது இறுதிப் படமாகவே நினைத்துச் செய்வேன். எனது முழு உழைப்பையும் அதற்குத் தருவேன். தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை அப்படம் வெல்ல வேண்டும் என முயல்வேன். அம்மாதிரியான முயற்சிகளில் பத்திரிகை தரும் பாராட்டு பெரும் மகிழ்ச்சியைத் தரும். இம்மாதிரி முயற்சிகளை நான் தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

அப்படியான எனது அடுத்த முயற்சிதான் இரவின் நிழல் நான் படத்தைப் பார்த்துவிட்டேன். அதற்கு அடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்துவிட்டு, பிரமித்துப் பாராட்டினார். இப்போது இசையமைக்க ஆரம்பித்துள்ளார். இதன் முதல் பிரதியை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

உங்களையே சாரும்

உங்களையே சாரும்

அடுத்து ஒத்த செருப்பு படத்தை இந்தியில் அமிதாப் பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சனை நாயகனாக வைத்து இயக்கியுள்ளேன். இரவின் நிழல் படத்தை உங்களுக்குத்தான் முதலில் காட்ட விரும்புகிறேன். ஒத்த செருப்புக்கு இன்னும் எத்தனை பெருமைகள் கிடைத்தாலும் அது உங்களையே சாரும் என்று பார்த்திபன் அறிக்கையில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X