கொரோனாவுக்கே சாவுமணி.. சென்னைக்கோ ஆலயமணி.. மணி மணியாய் டிவிட்டிய பார்த்திபன்!
சென்னை: கொரோனாவுக்கே சாவுமணி.. சென்னைக்கோ ஆலயமணி.. என அமைச்சர் எஸ்பி வேலுமணியின் டிவிட்டை ரீடிவிட் செய்து உற்சாகத்துடன் டிவிட்யுள்ளார்.
தமிழகத்தை பொருத்தவரை கொரானாவால் சென்னையே அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. வைரஸ் தொற்றிலும் சரி உயிரிழப்பிலும் சரி சென்னையே முதலிடத்தில் உள்ளது.

இதனால் பிழைப்புக்காக சென்னையை நம்பி வந்த பலரும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்,
வீழ்வேனென்று நினைத்தாயோ.. நான் சென்னை என்ற தலைப்பில் சென்னை தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் கவிதை எழுதியிருந்தார்.
இந்த கவிதை தொகுப்பு வீடியோவை அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், பேரிடர்கள் வென்ற சாதனை மைல்கற்களே என் வரலாறு.
ஆயிரமாயிரம் களப்பணியாளர்கள் அரசின் முயற்சிகளோடு இணைந்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கடைபிடித்து, தற்காத்து இம்முறையும் இடர் வெல்வேன். மீண்டும், மீண்டு வருவேன்! #வீழ்வேனென்றுநினைத்தாயோ #நான்சென்னை என குறிப்பிட்டு பார்த்திபன் டிவிட்டர் ஹேண்டிலை டேக் செய்துள்ளார்.
இதனை பார்த்த நடிகர் பார்த்திபன், கொரோனாவுக்கே சாவுமணி. சென்னைக்கோ ஆலயமணி ,
வாழ்த்துக்கு மாண்புமிகு வேலுமணி ! உளப்பூர்வ பங்களிப்பே என் பணி.. என உற்சாகமாய் டிவிட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











