twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்த்திபன் பரிதாபங்கள்.. தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் மக்களிடம் கையேந்தும் நிலை!

    |

    Recommended Video

    Parthiban Oththa Seruppu: பார்த்திபன் பரிதாபங்கள் மக்களிடம் கையேந்தும் பார்த்திபன்

    சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ள பார்த்திபன், தனது அடுத்த படத்தை தயாரிக்க Crowd Funding முறையை கையாள திட்டமிட்டுள்ளார்.

    நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளியான நிலையில், அதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    ஆனால், அந்த படத்தை திரையரங்கில் மக்கள் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

    கமலின் பிறந்தநாளன்று இன்னொரு லெஜெண்ட்க்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டோம்கமலின் பிறந்தநாளன்று இன்னொரு லெஜெண்ட்க்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டோம்

    ஆஸ்கர்

    ஆஸ்கர்

    பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் தனி ஒருவனாக நடித்து அசத்தியிருந்தார் பார்த்திபன். ஆஸ்கருக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு சார்பில், வடசென்னை, சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்திய அரசு, பாலிவுட்டில் வெளியான கல்லி பாய் திரைப்படத்தை தான் பரிந்துரைக்கு அனுப்பியது.

    தியேட்டரில் ஆளில்லை

    தியேட்டரில் ஆளில்லை

    சூர்யாவின் காப்பான் படத்துடன் வெளியான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்க்க தியேட்டரில் கூட்டமே வரவில்லை. ஒத்த செருப்பு படத்தை பார்த்த விமர்சகர்கள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தாலும், மக்களின் ஆதரவு ஒத்த செருப்பு படத்திற்கு கிடைக்கவில்லை.

    கைதிக்கு முன்பே

    கைதிக்கு முன்பே

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி படம் ஹீரோயின் மற்றும் பாடல் இன்றி வெளியானது. ஆனால், அதற்கு முன்பு பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தில் ஹீரோயின், பாடல்கள் மட்டுமல்ல பார்த்திபனை தவிர வேறு எந்த நடிகரும் நடிக்கவில்லை.

    விடாமுயற்சி

    விடாமுயற்சி

    இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறாத ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம், கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் குழுவினர் முன்பு திரையிட்டு காட்டப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. பார்த்திபனின் விடா முயற்சியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

    நெட்ஃபிளிக்ஸ்

    நெட்ஃபிளிக்ஸ்

    தியேட்டரில் ஒத்த செருப்பு படத்தை பார்க்காத பலரும் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் அந்த படம் வந்ததும், அதனை பார்த்து, தியேட்டரில் இப்படியொரு படத்தை பார்க்க தவறிவிட்டோம் என ஃபீல் செய்து வருகின்றனர். மேலும், இப்படியொரு புதிய முயற்சியை தமிழ் சினிமாவில் எடுத்த பார்த்திபனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    தயாரிப்பாளர் கிடைக்கல

    ஒத்த செருப்பு சைஸ் 7 போன்ற அற்புதமான கலை படைப்பை கொடுத்தும் நடிகர் பார்த்திபனுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காதது தான் வருத்தமான விஷயம். இந்நிலையில், இதுகுறித்து ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார் பார்த்திபன். அதில், அவருடைய வங்கி விபரங்களை இணைத்து, Crowd Funding மூலம் எனது படத்தை நீங்களும் இணைந்து தயாரிக்கலாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    டிக்கெட் விலை

    டிக்கெட் விலை

    பார்த்திபனின் அந்த பதிவுக்கு கீழே, பலர் அவரை கிண்டல் செய்தாலும், சிலர், படத்தின் டிக்கெட் விலையான 120 ரூபாயை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டோம் என்று ஸ்க்ரீன் ஷாட்டுடன் பதிவிட்டு வருகின்றனர். பார்த்திபனின் புதிய முயற்சிகளுக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Actor R Parthiban’s Oththa Seruppu Size Seven movie which was streaming in Netflix get huge response in social media. Actor Parthiban was plan to do his next venture with crowd funding.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X