மீனா குழந்தை மாதிரி.. அவருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா ?.. நடிகர் பார்த்திபன் உருக்கம்!

சென்னை : நடிகை மீனா குழந்தை மாதிரி அவருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா என நடிகர் பார்த்திபன் கலக்கத்துடன் கூறியுள்ளார்.

நடிகர் பார்த்திபனும் மீனாவும் பாரதிக்கண்ணம்மா,வெற்றிக் கொடிக்கட்டு , உன்னருகே நானிருந்தால், இவண் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பாரதிக்கண்ணம்மா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகும்.

பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பார்த்திபன், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து உருக்கத்துடன் கூறியுள்ளார்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனாவின் குழந்தைத்தனமான சிரிப்பும், குறும்பும் அவருடைய முகத்தில் இல்லாததை பார்க்கும் போது மனம் மிகவும் சங்கடமடைகிறது. மீனா பேசுவதும் நடந்து கொள்வதும் குழந்தைத்தனமாகவே இருக்கும். அவரது குழந்தையுடன் எங்காவது பார்த்தால், 'உனக்கே ஒரு குழந்தையா?' என்று கிண்டலாக கேட்பேன். மீனா வளர்ந்துதான் இருக்கிறாரே தவிர அவருடைய குழந்தைத்தனம் கொஞ்சம் கூட மாறவே இல்லை.

அழுகை உறைந்து

அழுகை உறைந்து

அப்படி இருக்கும்போது அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, அது இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டதே என்று தான் பார்ப்பேன் என்று கூறியுள்ள பார்த்திபன், அப்படிப்பட்ட மீனாவை வேதனையான சூழலில் பார்க்கும்போது சங்கடமாக இருக்கிறது என உருக்கமாக கூறியுள்ளார் பார்த்திபன். மீனாவின் கணவர் தொடர்ந்து ஐசியூவில் 6 மாதம் இருந்து இருக்கிறார். இந்த வேதனையை அவர் எப்படி தாங்கிக்கொண்டார் என்று தெரியவில்லை. நமது அன்புக்குரியவர்கள் ஐசியூவில் இருக்கும் வரை எல்லா பிரார்த்தனைகளையும் செய்வோம். ஆனால், அது கடந்து நிதர்சனம் வரும் போது அழுகை உறைந்து விடும் என்றும் கூறியுள்ளார் பார்த்திபன்.

வித்யாசாகர்

வித்யாசாகர்

மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 28ஆம் தேதி இரவு காலமானார். கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் வித்யா சாகர். இதனால் ஆரம்பத்தில் வீட்டிலேயே ஆக்ஸிஜன் சப்போர்ட்டுடன் இருந்த வித்யாசாகர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நுரையீரல் மாற்றப்படும் அளவுக்கு தொற்று பாதிப்பு இருந்தது. ஆனால் மாற்று நுரையீரல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையில் கடந்த 3 மாதங்களாக இருந்து வந்தார் வித்யாசாகர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிர் பிரிந்தது.

Recommended Video

Cool suresh ஆதங்கம்! Meena Husband மரணம் *Celebrity
நேரில் ஆறுதல்

நேரில் ஆறுதல்

இந்த துயர செய்தியை கேள்விப்பட்ட உடன் ரஜினிகாந்த், மீனாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும், ரஜினிகாந்த், குஷ்பு, ரம்பா, மன்சூர் அலிகான் என ஏராளமானோர் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீனாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X