»   »  'நான் நன்றி மறவேன்!' - தனக்கேயுரிய ஸ்டைலில் பார்த்திபன் கவிதை!

'நான் நன்றி மறவேன்!' - தனக்கேயுரிய ஸ்டைலில் பார்த்திபன் கவிதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகரும், இயக்குநருமான ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். எல்லா விஷயத்திலும் தனக்கென தனித்துவமான ஸ்டைல் வைத்திருப்பவர் பார்த்திபன். தனது பிறந்தநாள் வருவதையொட்டி சமீபத்தில் பார்த்திபன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். குறும்பும் கேலியுமாக, வார்த்தைகளில் விளையாடி அவர் எழுதியிருக்கும் கவிதையில் தெரிகிறது வாழ்க்கைப் பகடி.

'புதிய பாதை வெளியான நாளில் தான் புதிதாய்ப் பிறந்தேன். இப்போது 'உள்ளே வெளியே 2' எடுக்கத் தயார் நிலையில் இருக்கிறேன். தயாரிப்பாளர்தான் சிக்கவில்லை. பாரதிராஜா தொடங்கி இன்று புதிதாய் வந்திருக்கும் டைரக்டர்கள் பலரும் இன்னும் நான் உச்சம் தொடவில்லை என்கிறார்கள்' எனவும் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்துகொண்டுள்ளார் பார்த்திபன்.

Actor Parthiepan's poem about his career

சினிமாவிலும், வாழ்விலும் வித்தியாசமான, முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பார்த்திபன் சமூக நோக்கத்திற்காக என்றும் குரல் கொடுப்பவர். கலைத்தாகம் கொண்ட அந்தக் கலைஞனின் பிறந்தநாளில் வாழ்த்துகள் சொல்வோம். அவர் எழுதிய கவிதை கீழே...

ஆயிரம் அடிக்கும் அடியில்

ஆழ்துளை கலைக்கிணற்றில்

அகழ்வாய்வு கொண்ட

365 திங்களில்

அதிர்ஷடமெனும்

அபூர்வம் கண்டதில்லை நான்!

விதை புதைத்து

சுரை கொண்டதில்லை,

மரம் விதைத்தே

கனி உண்டிருக்கிறேன்.

பல்வேராய்ச்சியில்

பல்பு எரிந்தது போல...

பல்யுக்தி மல்யுத்த முயற்சியில்

நல் முத்துக்களாய்

கைதட்டல்கள் பெறுகிறேன்!

என் படங்களில் சூப்பர்

நட்சத்திரங்கள் நடித்ததில்லை

பிரம்மாண்ட இயக்குநர்களின்

படங்களில் நான் நடித்ததில்லை

இருப்பினும் இயங்குகிறேன்.

இருப்பை சிறப்பாய்

செதுக்கிய சமீபம் KTVI

பிறந்த நாளெனக்கு

14/4/1989(புதிய பாதை)! அடுத்த

பிறந்த நாளென்பது

'உள்ளே வெளியே 2'

வெளியீடும் வெற்றியும்!

தயார்: புதுமை+கமர்ஷியல் கதை.

தயாரிப்பாளர் தான்

முயற்'சிக்கவே' இல்லை!

என் இனிய பாரதி

ராசாவும் இசைய

ராசாவும் இன்றை

இளைஞ ராசாக்களும்

வருந்தி வாழ்த்துவது

"தகுதிக்கான உச்சம்

தொடவில்லை" என்பது.

எட்டாத ஸ்தூபம்

கிட்டாத ஸ்தானம்

அதற்கான ஸ்தூலம்

அறியவில்லை நானும்.

ஆனாலும் ஓடுகிறேன்

ஆறாமல் தேடுகிறேன்

அண்ணாந்து பார்க்கிறேநென்

விஸ்வரூப உழைப்பின் வியர்வை

சொட்டு சொட்டாய் நுனி

நாவை நனைக்க- உயிர்

கொள்ளும் சினிமா தாகம்

முன்பினும் மூர்க்கமாய்

மூச்சடக்கி பாய்கிறது.

வெற்றிக்கு உற்றோரே

உங்களின் வாழ்த்து

இன்றும் நாளையுமல்ல

இன்றியமையாதது என்றுமே

என்றறிவேன் நானும்

நன்றி'மறவேன்!!!

English summary
Director and Actor R.Parthiepan's birthday is today. Recently he wrote an poem about his cinema carer and next steps.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil