பைனான்சியர் கடனை அடைக்க முதன்முதலா வாங்கிய பங்களாவை கூட வித்திருக்கேன்.. மனம் திறக்கும் பார்த்திபன்!

சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தான் முதல் முறையாக வாங்கிய பங்களாவைக் கூட விற்றுவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

வாங்கிய பங்களாவை கூட வித்திருக்கேன்..மனம் திறக்கும் பார்த்திபன்!- வீடியோ

சென்னை: சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தான் முதல் முறையாக வாங்கிய பங்களாவைக் கூட விற்றுவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன்சுமை, கந்து வட்டி கொடுமையால் அசோக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கந்துவட்டி கொடுமையால் பறிபோகும் கடைசி உயிர் இதுவாக இருக்க வேண்டும் என்றும் கந்துவட்டியை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அசோக்குமாரின் மரணத்துக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பார்த்திபனின் அனுபவம்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அஜித், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோரும் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் கந்துவட்டி கொடுமையால் தனக்கு நேர்ந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அன்புச்செழியனும் ஒருவர்..

அன்புச்செழியனும் ஒருவர்..

அதாவது நான் சினிமா பைனான்சியர் பல பேர்கிட்ட வட்டிக்கு பணம் வங்கியிருக்கேன் என அவர் தெரிவித்துள்ளார். அதில் அன்புச்செழியனும் ஒருவர் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பங்களாவைக்கூட வித்திருக்கேன்

பங்களாவைக்கூட வித்திருக்கேன்

வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில் கொடுக்க, தான் முதன்முதலா வாங்குன பங்களாவைக்கூட வித்திருக்கேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் யார்கிட்டேயும் தலைகுனிந்து நின்றதில்லை என்றும் பார்த்திபன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தனக்கும் அந்த திமிர் பிடித்திருக்கு

தனக்கும் அந்த திமிர் பிடித்திருக்கு

அந்த திமிர் என்னை பிடித்திருக்கு என்றும் தனக்கும் அந்த திமிர் பிடித்திருக்கு என்றும் அவர் கூறினார். நான்கு படங்களில் நடித்து கடனை அடைத்துவிட்டு மறுபடியும் படமெடுப்பேன் அதுதான் தனக்கு ஏற்படும் இடைவெளி என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.

சவாலாகதான் எதிர்கொள்கிறேன்..

சவாலாகதான் எதிர்கொள்கிறேன்..

தான் ஆதங்கப்பட்ட குரல் கொடுப்பது சக நண்பர்களின் பிரச்சனைகளுக்கு தான் என்றும் மற்றபடி தான் சந்திக்கும் பிரச்சனைகளை சவாலாகதான் எதிர்கொள்கிறேன் என்றும் பார்த்திபன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X