பார்த்திபன் வீட்டு ஆட்டுக்குட்டியும் குண்டக்க மண்டக்கனு கத்துமா?
சென்னை : நடிகர், இயக்குநர் ஆர்.பார்த்திபன், தன் வீட்டு ஆடு இரண்டு குட்டிகள் போட்டிருப்பதை மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எதையும் வித்தியாசமாகவும், தனித்துவத்தோடும் செய்யும் ஆர்.பார்த்திபன் தனது வீட்டு ஆடு குட்டி போட்டிருப்பதையும் கீச்சாக ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். பார்த்திபன் வளர்க்கும் ஆடு குட்டி போட்டிருப்பதாக பகிர்ந்த ட்வீட்டுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியாகவும் நக்கலாகவும் கமென்ட் செய்துள்ளனர்.
சென்னையில் கார் சாவியைத் திருகும்போது ஆட்டுக்கு பிரசவ வலி எடுத்ததாம். தோட்டத்தை அடையும்போது இரண்டு குட்டிகளை ஈன்றிருப்பதாக பார்த்திபன் சொல்லியுள்ளார்.
பிரசவ வலி
"சென்னையில் கார் சாவியை திருகும் போது பிரசவ வலி, தோட்டத்தை அடையும்போது ரெட்டைக்குட்டி! போட்டா போட்டியாய் photo எடுக்கும் என் கண்கள் , குட்டி குட்டியாய் நம் மனதில் ஆட்டையைப் போடும் மகிழ்ச்சிகள்!" என ட்வீட் செய்துள்ளார்.
ஆட்டுக்கும் ஆபரேஷன்
"மார்க் மை வேர்ட்ஸ்... வரும் காலத்தில் ஆடுகளுக்கும் ஆபரேஷன் செய்தே பிரசவம் நடக்கும்." என 'மெர்சல்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் டயலாக்கை உல்டா செய்துள்ளார் ஒருவர்.
குண்டக்க மண்டக்க
உங்க வீட்டு ஆட்டுக்குட்டியாவது ஒழுங்கா கத்துமா... இல்ல அதுவும் குண்டக்க மண்டக்க தானா?
ஆட்டுக்கு வாழ்த்துகள்
ரெட்டைக் குட்டி போட்ட ஆட்டுக்கும் வாழ்த்துகள். ஃபோட்டோ எடுத்த உங்களுக்கும் வாழ்த்துகள்!
ஆனந்த கொண்டாட்டம்
குட்டிகளின் மகிழ்ச்சியான துள்ளல்களை காணும்போது நம் மனமும் குழந்தையாக மாறி அதனுடனே சேர்ந்து துள்ளுகிறது. அதுவும் ஒரு ஆனந்த கொண்டாட்டம் தான்.


Click it and Unblock the Notifications











