வீட்டுக்கு எதிரே 2வது மனைவியுடன் குடித்தனம்.. பதறும் பருத்திவீரன் சரவணனின் முதல் மனைவி!
சென்னை: அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் பருத்திவீரன் சரவணன். ஒரு காலத்தில் கதாநாயகனாக அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த சரவணனுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்து போனதைத் தொடர்ந்து, தற்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடித்த 'சட்டமும் நீதியும்' என்ற இணையத் தொடர் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், பருத்திவீரன் சரவணின் முதல் மனைவி சூர்யஸ்ரீ, காவல்நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், பருத்திவீரன் சரவணன், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு எதிரிலேயே குடி வைத்து இருக்கிறார். இதனால் தினமும் சண்டை, தகராறு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு செருப்பு ஸ்டாண்டை கூட வைத்துக் கொள்ளக்கூடாது, இந்த வீடு என்னுடையது என எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். ஒன்றுமே இல்லாமல் அந்த பெண் என் வீட்டுக்கு வந்த போது, அவளுக்கு ஆதரவு கொடுத்து பார்த்துக்கொண்டது நான் தான். ஆனால், அந்த பெண் அந்த நன்றியை மறந்துவிட்டாள்.

பருத்திவீரன் சரவணன்: என் வீட்டு கதவு திறந்து இருந்தாலே, கதவை எட்டி உடைத்து, இந்த வீடு என்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறாள். 18ந் தேதி செருப்பு ஸ்டாண்டில் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த செருப்பு ஸ்டாண்டை அடித்து உடைத்து போட்டுவிட்டாள். அது மட்டுமில்லாமல் நானும் என் கணவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை, என்னுடைய வீட்டுக்குள் புகுந்து, அந்த போட்டோவை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று அந்தப் பெண் எடுத்து சென்றுவிட்டாள், இப்படி தினம் தினம் அந்த பெண்ணால் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன்: என்னுடைய செலவுக்கு சரவணன், எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை. விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் அவர் ஒரு முறை கூட அதற்கு ஆஜராகவில்லை. சரவணன் எனக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், அவரால், மாதா மாதம் பணத்தை கொடுக்க முடியாது என்பதால், ஒரே செட்டில்மெண்டாக அவர் பணத்தை தர வேண்டும். இப்போது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். அப்பா, அண்ணன் இவர்கள் தான் என்னை பார்த்துக் கொள்கிறார்கள்.
குழந்தை இல்லை: அவருக்கு சினிமாவில் படங்கள் இல்லாத நேரத்தில் நான் நன்றாக சம்பாதித்து தான் சரவணனையும், என் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டேன். அவர், சம்பாதித்து கொடுத்து இருந்தால், நானும் குழந்தை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பேன். ஆனால், அவர் சம்பாதித்து தராததால், அவருக்காகவும் குடும்பத்திற்காக நான் ஓடியதால், என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. கடைசியில் இப்போது குழந்தை இல்லை என்கிறார். இப்போது வரைக்கும் அந்த வீட்டின் கடனை நான் தான் கட்டி வருகிறேன். சரவணன் ஒரு ரூபாய் கூட எனக்காக செலவு செய்யவில்லை. ஆனால், வீட்டிற்கு சொந்தம் கொண்டாடுகிறார். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் பருத்தி வீரன் சரவணணும், அவருடைய இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தான் என பருத்திவீரன் சரவணனின் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











