வந்துட்டேன்னு சொல்லு... ட்விட்டரில் இணைந்த நடிகர் பசுபதி
சென்னை : குலேசன், வெயில், அசுரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் பசுபதி.
முரட்டுத்தனமான வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் சிறப்பாக பொருந்தி வருபவர் பசுபதி.
இந்நிலையில் இன்றைய தினம் ட்விட்டர் பக்கத்தில் பசுபதி இணைந்துள்ளார்.

சிறப்பான ரோல்கள்
நடிகர் பசுபதி தமிழ் திரைப்பட மேடை நாடக நடிகர். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடக குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். முரட்டுத்தனமான வில்லன் மற்றும் சாதுவான கேரக்டர் என அனைத்து ரோல்களிலும் சிறப்பாக பொருந்துபவர்.

சிறப்பான கேரக்டர்கள்
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். அரவான், வெடிகுண்டு முருகேசன், குசேலன், வெயில், விருமாண்டி என இவரது நடிப்பில் தூள் கிளப்பிய படங்கள் ஏராளம். விஜய் சேதுபதியின் கருப்பன் படத்திலும் சிறப்பான கேரடக்டர் ரோலில் நடித்திருந்தார்.

முதல் மகிழ்ச்சிப் பதிவு
இந்நிலையில் இன்றைய தினம் ட்விட்டர் பக்கத்தில் இவர் இணைந்துள்ளார். ட்விட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி என்றும் எனது முதல் ட்விட்டர் பதிவு என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் தனது சமீபத்திய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஜனகராஜ், கவுண்டமணி என நடிகர்கள் ட்விட்டரில் இணைந்துவரும் நிலையில், தற்போது இவர் இணைந்துள்ளார்.

சிறப்பான பெயர்
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் இவருக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு ப்ராஜெக்ட்களில் இவர் நடித்து வருகிறார். இவரது இயல்பான நடிப்பிற்காக ஏராளமான ரசிகர்கள் இவரை ட்விட்டரில் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











