Ethirneechal -ஆதிகுணசேகரனாக நடிக்கப்போகும் பெரிய நடிகர்?..கிட்டத்தட்ட உறுதியாம்?..இருந்தாலும் ஒத்துக்கொள்வாரா?
சென்னை: Ethirneechal Adhi Gunasekaran (எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன்) எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக சினிமாவில் கலக்கும் நடிகர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து திரைப்படங்களின் மூலம் எந்த அளவு புகழடைந்தாரோ அதைவிட கொஞ்சம் கூடுதலாக எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பிரபலமடைந்தார். தொண்டையை செருமுவது, டயலாக் டெலிவிரி, உடல் மொழி, எதார்த்தமான நடிப்பு என அதகளம் செய்தார். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மூலம் உச்சக்கட்ட புகழ் அடைந்தார் மாரிமுத்து.

உயிரிழந்த மாரிமுத்து: ஆனால் எதிர்நீச்சல் நாடகத்துக்காக கடந்த 8ஆம் தேதி வளசரவாக்கத்தில் டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது உடலில் அசௌகரியம் ஏற்பட உடனடியாக தானே காரை எடுத்துக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் அவரின் சொந்த ஊரான பசுமலைதேரியில் தகனம் செய்யப்பட்டது.
அடுத்த ஆதிகுணசேகரன்: மாரிமுத்து உயிரிழந்ததை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் அவர் ஏற்றிருந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதனை அவர் ஒரு பேட்டியில் உறுதி செய்து இருந்தாலும் நிறைய படங்கள் இருப்பதால் சீரியலில் நடிப்பதா வேண்டாமா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என கூறியிருந்தார்.

பசுபதி: வேலராமமூர்த்தி தொடர்ந்து இழுத்தடித்துவருவதால் நடிகர்கள் ராதாரவி மற்றும் பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பசுபதியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர் நடிக்க ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இருப்பதால் அவரே அடுத்த ஆதிகுணசேகரனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதில் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை.
சாத்தியமா?: பசுபதி சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக கடந்த பல வருடங்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அடிப்படையில் கூத்துப்பட்டறை கலைஞரான அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாமல்தான் இருந்தார். எனினும் அவர் சில சூழல் காரணமாக சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். சினிமா அவருக்கு ஏகப்பட்ட புகழை கொடுத்திருக்கிறது. இப்போதும் அவரது கைவசங்கள் படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எதிர்நீச்சல் சீரியலில் பசுபதி நடிப்பதற்கு சாத்தியம் குறைவுதான் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











