NEEK ஹீரோ பவிஷ்க்கு பிடிச்ச ஹீரோயின் யார் தெரியுமா.. அவர் இதுக்குத்தான் பயப்படுவாராம்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் நேற்றைய தினம் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவரது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக்கி உள்ளார் தனுஷ். தனுஷின் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளியாகி உள்ளது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இளைய தலைமுறையினரை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இட்லி கடை படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

Pavish NEEK movie Samantha

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முற்றிலும் இளைஞர்களை மையமாக வைத்து நவீனகாலத்திய காதலையும் அதன் சம்பவங்களையும் கொடுத்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் அவரது அக்கா மகன் பவிஷை நாயகனாக்கி அழகு பார்த்துள்ளார். மேலும் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட இளைஞர் பட்டாளம் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பவிஷிற்கு பிடித்த ஹீரோயின்: தனுஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகி உள்ள நீக் படம் அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள பவிஷ் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. படம் குறித்து அவர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகை சமந்தா என்று அவர் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Pavish NEEK movie Samantha

சென்னையில் பிடித்த உணவகம்: இதே போல அவர் அதிகமாக பயப்படுவது பல்லிக்குத்தானாம். சென்னையில் தனக்கு மிகவும் பிடித்த உணவகம் என்றால் அது தொப்பி வாப்பா பிரியாணிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்தமான அதிகமான பாடல்கள் இருந்தாலும் தற்போது காதல் பெயில் பாடல்தான் தன்னுடைய ஃபேவரிட் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கான்டாக்ட் லிஸ்ட்டில் தனக்கு மிகவும் பிடித்தமானவர் தனுஷ்தான் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை தன்னுடைய நண்பர்கள் பவி என்று செல்லமாக அழைப்பார்கள் என்றும் ஆனால் தனக்கு அப்படி கூப்பிடுவது பிடிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பவிஷ் லட்சியம்: கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் பெட்டராக வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்றும் கூறியுள்ளார். தனக்கு கிரிக்கெட்டராகத்தான் அதிகமான ஆசை இருந்ததாகவும் தனக்கு பிடித்த உணவு பிரியாணி என்றும் அவர் ராப்பிட் பயர் கேள்வி -பதிலில் பேசியுள்ளார். தனுஷ் இயக்கத்தில் தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளது தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்து தனுஷ் தன்னிடம் கூறியபோது தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: neek movie samantha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X