நடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்!

விசாகப்பட்டினம்: முழு நேர அரசியலில் குதித்துள்ள தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகராக திகழ்பவர் பவன் கல்யாண். 46 வயது பவன் கல்யாண் நம்ம ஊர் தல அஜித்தைப் போல் தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்.

Actor Pawan Kalyan gets life threat!

பவர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் (அங்கு பவர்ஸ்டாருக்கு அர்த்தம் வேறு) பவன் கல்யாண் , நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த அஞ்ஞானவாசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்டார்.

ஜன சேனா என்ற அரசியல் கட்சியை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார் பவன் கல்யான். இப்போது முழு நேர அரசியலில் குதித்துவிட்டார். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் தன் கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், சில மர்ம நபர்கள், காரில் விபத்தை ஏற்படுத்தி அல்லது குண்டு வைத்து கொலை செய்துவிடுவோம் என செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார். ஆனால் கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X