மருத்துவமனையில் விஜயகாந்த்.. கேப்டனுக்கு என்னாச்சு.. கவலையில் ரசிகர்கள், தொண்டர்கள்

சென்னை : நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

Vijayakanth நலமுடன் உள்ளார்.. விரைவில் வீடு திரும்புவார்.. DMDK அறிக்கை

Actor- politician Vijayakanth admitted in hospital

ஆனால் தேமுதிக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் எனவும் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவரது மனைவி பிரேமலதா தான் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ம் தேதி விஜயகாந்த்திற்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த், அக்டோபர் 2 ம் தேதி வீடு திரும்பினார்.

1979 ல் வெளியான அகல் விளக்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜயகாந்த், 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். 1980 களில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், 2005 ம் ஆண்டு தேமுதிக கட்சியை துவக்கினார். அரசியல் ஈடுபட்ட போதிலும் தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார்.

2010 ல் விருதகிரி படத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விஜயகாந்த் குறைத்துக் கொண்டு, தீவிர அரசியலில்இறங்கினார். 2015 லக சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கவலையில் உள்ளனர். விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X