ஆசன வாய் அருகே அறுவை சிகிச்சை.. உருக்கமாக பேசிய பொன்னம்பலம்.. குணமாக இத்தனை மாதங்கள் ஆகுமா?

சென்னை: ஸ்டன்ட் கலைஞராக சினிமாவில் அறிமுகமான பொன்னம்பலம் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்த நிலையில், பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து மிரட்டினார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலம் என்கிற பெயரிலேயே அவர் நடித்து வெளிக்காட்டிய வில்லத்தனத்தை எல்லாம் எப்போதும் மறக்கவே முடியாது.

தாய்க்கிழவி நீளமாக பேசாத மூச்சு வாங்கும் என மனோரமாவையே அட்டாக் செய்த பொன்னம்பலம் முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே போட்டு அந்த அடி அடிப்பார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகள் என அனைத்து மொழிகளிலும் நடித்த பொன்னம்பலம் கடந்த 5 ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், மருத்துவ செலவுகளுக்கே ஏகப்பட்ட பணம் செலவாகி விட்ட நிலையில், தற்போது பொருளாதார கஷ்டத்தில் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Actor Ponnambalam heartfelt thanks note and emotional talks after surgery trending in kollywood
Photo Credit:

பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து முன்னதாக நடிகர் சிரஞ்சீவி ஓடோடி வந்து அவரை பார்த்து அவருக்கு தேவையான உதவிகளை செய்துக் கொடுத்தார். தொடர்ந்து ஐசியூவில் இருந்த தான் தற்போது தான் அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டேன் என்றும் தனக்கு உதவி செய்த முன்னணி நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.

ஆசன வாய் அருகே ஆபரேஷன்: கடந்த 5 ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருவதாக பொன்னம்பலம் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம் சமீபத்தில், ஆபரசேஷனுக்காக அட்மிட் ஆனதாகவும் ஆசன வாய் அருகே அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.

2 மாதங்கள் ஆகும்: தொடர்ந்து பல மாதங்கள் உடல் நலம் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்த பிரபல நடிகர் பொன்னம்பலம் தற்போது எமர்ஜென்சி வார்டில் இருந்து நார்மல் வார்டுக்கு மாறிவிட்டதாகவும் இன்னமும் முழுமையாக குணமாகி பழையபடி வர 2 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனக்கூறியுள்ளார்.

பிரபலங்களுக்கு நன்றி: நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து செழிப்பாக வாழ்ந்து வந்த பொன்னம்பலம் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும், உடல்நலக்குறைவு காரணமாக ஏகப்பட்ட மருத்துவச் செலவுகளை செய்த நிலையிலும், பொருளாதார ரீதியில் அடிபட்டுக் கிடப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு உதவிய சிரஞ்சீவி, கமல், தனுஷ், ரவி மோகன், சரத்குமார், நிழல்கள் ரவி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X