70 வருஷத்துக்கு கால்ஷீட் கேட்ட பொன்வண்ணன்.. சரண்யா விஷயத்தில் பஞ்சாயத்து செய்த பாரதிராஜா!

சென்னை: நடிகை சரண்யா மற்றும் நடிகர் பொன்வண்ணன் இருவரும் கருத்தம்மா படத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். தன்னுடைய குடும்பத்திற்கு முக்கியத்துவம் தரும் சரண்யா, படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார்.

இதனிடையே தன்னுடைய காதல் கதை குறித்து தற்போது இருவரும் தனித்தனியாக பகிர்ந்துள்ளனர். தன்னுடைய காதலை சரண்யாவிடம் கூறிய பொன்வண்ணன், 70 ஆண்டுகள் கால்ஷீட் கேட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சரண்யாவும் தன்னுடைய அப்பாவிடம் இது குறித்து பேச, இயக்குநர் பாரதிராஜாவும் பொன்வண்ணனுக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.

ponvannan saranya bharatiraja

நடிகை சரண்யா பொன்வண்ணன்: நடிகை சரண்யா தன்னுடைய முதல் படத்திலேயே கமல்ஹாசனுக்கு ஜோடியானவர். கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் என்ற மிகப் பெரிய ட்ரெண்ட் செட்டர் படத்தில் இடம்பெற்றவர் சரண்யா. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து நாயகியாக பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சரண்யா. இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பொன்வண்ணனை காதல் திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே மருத்துவர்கள் என்பது கூடுதல் தகவல்.

70 வருஷ கால்ஷீட்: தற்போதும் அம்மாவாக மிக அழுத்தமான கதைக்களில் நடித்து வருகிறார் சரண்யா. தனியாக டெய்லரிங் கிளாஸ்களையும் நடத்தி வருகிறார். தன்னுடைய உடைகளையும் தன்னுடைய மகள்களின் உடைகளையும் தானே தைப்பதாக அவர் தனது பேட்டிகளில் பெருமையாக கூறியுள்ளார். இந்நிலையில் தன்னிடம் தன்னுடைய கணவர் காதலை ப்ரொபோஸ் செய்தது குறித்து சரண்யா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். தன்னிடம் பேசிய பொன்வண்ணன் தன்னிடம் எழுபது ஆண்டுகள் கால்ஷீட் கேட்டதாகவும் சரண்யா தெரிவித்துள்ளார். முதலில் தான் குழம்பியதாகவும் என்ன இவர் இப்படி பேசுகிறார் என்று தான் யோசித்து தன்னுடைய அப்பாவிடம் இது குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காதலை சொன்ன பொன்வண்ணன்: இதே நிகழ்வை தன்னுடைய பேட்டியில் பகிர்ந்துள்ள நடிகர் பொன்வண்ணன், தன் வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கருத்தம்மா ஷூட்டிங்கில் சரண்யாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த படத்தில் பாரதிராஜாவுடன் அசோசியேட் இயக்குனராக தான் பணியாற்றிய நிலையில், சரண்யாவிடம் 70 ஆண்டுகள் கால்ஷீட் கிடைக்குமா என்று கேட்டதாகவும் பொன்வண்ணன் கூறியுள்ளார். அவர் யோசித்து கூறுவதாக கூறியுள்ள பொன்வண்ணன், சரண்யாவிடம் தான் அவர்மீது அதிகமான காதலுடன் இருப்பதாக எல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை எல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா கொடுத்த சர்ட்டிபிகேட்: இதுகுறித்து சரண்யா தன்னுடைய அப்பாவிடம் பேசிய நிலையில் அவர் இயக்குனர் பாரதிராஜாவை போய் பார்த்ததாகவும் அவர் பொன்வண்ணனைவிட சிறந்த மாப்பிள்ளை கிடைக்க மாட்டார் என்று சர்டிபிகேட் கொடுத்ததுடன் வீட்டிற்கும் சென்று பேசியதாகவும் பொன்வண்ணன் கூறியுள்ளார். இதையடுத்து தன்னிடம் சரண்யாவின் அப்பா வந்து பேசிய நிலையில் தான் சினிமாவில் மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பேன் என்றும் அதற்குள் சரண்யா குடும்பம் நடத்த வேண்டும் என்று தான் கேட்டதாகவும் தொடர்ந்து பத்தாயிரம் ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு விட்டே தான் திருமணம் செய்து கொண்டதாகவும் பொன்வண்ணன் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X