ரஜினிக்கு என்னை பார்த்தா பயம்.. தனியா நடிச்சு ஜெயிச்சு காட்டுங்க.. சவால் விட்ட பவர் ஸ்டார்!
சென்னை: நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சீனிவாசன். இவரை அனைவரும் செல்லமாக பவர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவரை எவ்வளவு தான் கிண்டல் செய்தாலும், என்னை ஒரு டாப் நடிகராக நினைத்துக்கொள்வேதே பவர் ஸ்டாரின் ஸ்பெஷல், அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ரஜினிக்கு என்னை பார்த்தா பயம் என்று பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர், மருத்துவர், நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி, பாடகர், தயாரிப்பாளர், தொழில் அதிபர் என பல முகங்களை கொண்டவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் 2011ஆம் ஆண்டு வெளியான லத்திகா படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனே தயாரித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பை பார்த்து ட்ரோல் செய்யாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு படம் செம மொக்கையாக இருக்கும்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்: இந்த படத்தை அதனை தொடர்ந்து நடிகர் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை திரைப்படமான இந்த படத்தில் ஒரு பெண்ணை காதலிக்க மூன்று பேரும் சண்டை போட்டுக்கொள்வதும், பவர் ஸ்டாரின் உடல் மொழியும் ஆடியன்சை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, களம், சும்மா நச்சுனு இருக்கும், சக்கைப்போடுபோடு ராஜா, அல்டி, வாமனன், போர்க்களம், நானே வருவேன் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
பிக்கப் டிராப்: இவர் கடைசியாக எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவரது நடிப்பில் உருவான நாங்க ரொம்ப பிஸி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனது. இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். வனிதா விஜயக்குமாரை வைத்து பிக்கப் டிராப் படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார். அந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக இருவரும் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற போட்டோ இணையத்தில் வெளியாகி, பவர் ஸ்டாரும் வனிதாவும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று பெரும் புயலை கிளப்பியது.
என்னை பார்த்து பயம்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பவர் ஸ்டார், என்னிடம் நிறைய திறமை இருக்கிறது, யாரும் என்னை கூப்பிடவில்லை. இதே ஏன் சூப்பர் ஸ்டார் என்னை கூப்பிடவில்லை. அவருக்கு என்னை பார்த்து பயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் படத்தை வெளியிட்டு ஜெயிக்கிறார்கள். இது எப்படி ஜெயித்ததாகும். தனியா நின்னு ஜெயிக்கனும் அது தான் ஒரு டாப் ஹீரோவிற்கு அழகு.
என்ன பவரு: அஜித், விஜய்க்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள், அதே போல இவரும் தனியாக வந்து தனது ரசிகர்களை வைத்து ஜெயித்து காட்ட வேண்டும். இப்படித்தான் அவர் களத்தில் குதிக்கனும், நீயும் நடி நானும் நடிக்கிறேன் மோதி பார்ப்போம் என்று களத்தில் குதிக்க வேண்டும். ரேசில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் தான் பெயர் வர வேண்டும் என்று, ரஜினிகாந்த் குறித்து பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் என்ன பவரு தலைவருக்கு கிட்டயே சவாலா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











