கைவசம் 120 இருக்கு.. ஆனா அது மட்டும்தான் இல்லவே இல்லை.. பவர் ஸ்டாருக்கு வந்த கஷ்டம்!
சென்னை : 120 படங்கள் கைவசம் இருப்பதாக நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் டாக்டர் ஶ்ரீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் ரசிகர்கள் மனதில் நிரந்திற இடம் பிடித்தார். இதற்கு பிறகு பல படங்களில் நடித்து வந்த பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் தற்போது அவருக்கு படங்களே இல்லை.

பவர்ஸ்டார் ஶ்ரீனிவாசன் கடைசியாக எஸ்.ஏ.சியின் கேப்மாரி படத்தில் நடித்து இருந்தார். தற்போது அவருக்கு ஒன்னு இரண்டு படங்களே உள்ளன. பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் சமீபத்தில் கூட நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை பகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தார் .
சமீப காலமாக நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு குறைந்து போனதால், பவர்ஸ்டார் விருது விழாக்கள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார் .

இவ்வாறு ஒரு விழாவில் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் நீங்கள் 250 படங்களில் நடிக்க போவதாக தகவல்கள் உள்ளது என பவர்ஸ்டாரை பார்த்து கேட்க மிகவும் நகைச்சுவையாக எனக்கு இன்னும் வரிசையாக 120 தான் படங்கள் இருக்கிறது .120 படங்களில் நடிக்க உள்ளேன் என கூறியிருந்தார் .
மேலும் தன்னுடன் படத்தில் நாயகியாக நடிக்க இனிமேல் தான் ஒரு பெண் பிறந்து வர போகிறாள் என்றும் தெரிவித்தார். இந்த நகைச்சுவை பேச்சுக்கு விழாவில் கலந்து கொண்ட பல மக்களும் ஆரவாரம் எழுப்பி உற்சாகமான சிரித்து மகிழ்ந்தனர்.

பவர்ஸ்டார் ஶ்ரீனிவாசன் படங்களில் அவ்வளவாக பார்க்க முடியவில்லை என்றாலும், ரசிகர்கள் அவரை மறக்காமல் அவரது நகைச்சுவைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர் .
மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்த மேடையில் அவருடன் ஆட வந்த தொகுப்பாளரை நான் ஆண்டி கூட எல்லாம் ஆடுறது இல்லை என கிண்டல் செய்தார். இருந்தும் தொகுப்பாளர் கட்டாயப்படுத்த அவருடன் மேடையில் நடனம் ஆடினார் பவர்ஸ்டார் .


Click it and Unblock the Notifications











