த்ரிஷாவோடு தனி விமானத்தில் விஜய்.. அது மட்டும் பாதுகாப்பா? பவர் ஸ்டார் என்ன இப்படி கேட்கறாரு?
சென்னை: நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய். தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இவரது அரசியல் நடவடிக்கைகள் தற்போது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்றார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. மேலும், நடிகை திரிஷாவுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையில் நல்ல நட்புறவு இருப்பதை பலரும் பலவிதமாக பேசி வருவதால், நடிகர் விஜய் குறித்து குதர்க்கமாக பேச வேண்டும் என்றாலோ, விஜய் குறித்து அவதூறுகளை சொல்ல வேண்டும் என்றாலோ பலரும் நடிகை த்ரிஷாவுடன் விஜய்யை சேர்த்து வைத்து பேசிவிடுகிறார்கள்.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கு கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அதிரடியான பதிலடி கொடுத்திருந்தார். ஆனாலும் விஜய் மீதோ, நடிகை த்ரிஷா மீதோ இந்த விமர்சனம் குறைந்தபாடில்லை. இப்படியான நிலையில் அண்மையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து விமர்சித்துள்ளார்.

பவர் ஸ்டார்: அவர் பேசும்போது, " நடிகர் விஜய்யை எனக்கு முன்கூட்டியே தெரியும். நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்தபோது விஜய் மிகவும் எளிமையாக பேசினார். பெரிய ஸ்டார் என்ற மனநிலை அவரிடத்தில் இல்லை. மேலும், அவர் என்னிடத்தில் பேசும்போது, எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால் எனது வீட்டில் உங்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் எனக் கூறினார். நான் அன்றைக்கு பார்த்த விஜய் இன்றைக்கு இல்லை. அவர் ரொம்பவும் மாறிவிட்டார். கட்சி ஆரம்பித்த பின்னர் அவரது தோரணை மாறிவிட்டது. அவருக்கு ஆணவம் வந்துவிட்டது. இது அவரது பேச்சிலேயே தெரிகிறது.
ஆணவம்: 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய் எங்கு போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். விஜய் இப்போதே இப்படி இருக்கிறார் என்றால் இன்னும் 5 ஆண்டுகள் ஆகிவிட்டால் எப்படி இருப்பார் எனத் தெரியவில்லை. விஜய்யின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். விஜய் பல விஷயங்களை சும்மா பேச வேண்டும் என பேசுகிறார்.

த்ரிஷா: பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். ஆனால் கோவாவிற்கு தனி விமானத்தில் த்ரிஷாவுடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சென்றுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறும் விஜய், த்ரிஷாவை தனி விமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் சென்றால் அது பாதுகாப்பா? தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால், த்ரிஷாவை தனது பாதுகாப்பிற்காக உடன் அழைத்துச் சென்று விட்டு, அழைத்து வருகிறார். எனக்கும் விஜய்யை போல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. காசு செலவு செய்தால் அவரைப்போல என்னாலும் கூட்டம் கூட்ட முடியும்" என பேசியுள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன், விஜய் குறித்தும் த்ரிஷாவுடன் விஜய் கோவாவிற்கு தனி விமானத்தில் சென்றது குறித்தும் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











