Kalki 2898 AD: திஷா பதானியுடன் ரொமான்ஸ் செய்யும் பிரபாஸ்.. கல்கி 2898 AD அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் கல்கி 2898 AD படம் வரும் மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பிரபாசுக்கு வில்லனாக மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்தப் படம் முன்னதாக பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் சூட்டிங் தாமதமானதால் தற்போது மே மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் பிரமோஷன்களை அடுத்த மாதத்திலேயே துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷனை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் முன்னதாக வெளியான நிலையில் படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி முன்னதாக படத்தில் அவரது லுக் போஸ்டரும் வெளியாகி மிரட்டியது. இந்தப் படத்தின் ரிலீசை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கல்கி 2898 AD: நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 AD, இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக மிரட்டியுள்ளார். முன்னதாக அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக நடிகை சாவித்ரியின் மகா நடி படத்தை கீர்த்தி சுரேஷை வைத்து இயக்கி மிகுந்த கவனம் பெற்றிருந்தார்.
டூயட் காட்சிகள் சூட்டிங்: கல்கி 2898 AD படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இருந்தபோதிலும் படத்தின் ஒருசில காட்சிகளை மீண்டும் நாக் அஸ்வின் படமாக்கி வருகிறார். தற்போது பிரபாஸ் மற்றும் திஷா பதானியின் டூயட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இந்தப் பாடல் காட்சி சில தினங்களில் எடுத்து முடிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்துள்ள திஷா பதானிக்கு கல்கி 2898 AD படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
மே 9ம் தேதி ரிலீஸ்: வரும் மே மாதம் 9ம் தேதி கல்கி 2898 AD படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் பிரபாஸ் தொடர்ந்து ஒரு மாத காலம் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் பிரமோஷன்களை அடுத்த மாதம் முதலே துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக 5 பெரிய நிறுவனங்கள் இணைந்து உழைத்து வருவதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவகையிலும் சமரசம் செய்துக் கொள்ளாமல் மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பை ரசிகர்களுக்கு வழங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரபாஸ் -திஷா பதானி பாடல் காட்சி: தற்போது பிரபாஸ் -திஷா பதானியின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வரும் சூழலில், இந்தப் பாடல் காட்சி ரீ-சூட் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த பிரமோஷன்களில் முன்னணி நடிகர்களையும் ஈடுபடுத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











