பாகுபலிக்கு பர்த்டே.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேப்பி பர்த்டே டார்லிங்! #HappyBirthdayDarling

Recommended Video

Prabhas Exclusive Interview | Saaho Special

சென்னை: பாகுபலி படத்தின் ஹீரோவான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மொழி ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகரான பிரபாஸ், 2002ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஈஷ்வர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்த இவருக்கு பெரும் பேரும் புகழும் கிடைத்தது. பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரபாஸ்.

பாகுபலி கேரக்டர்

பாகுபலி கேரக்டர்

பிரபாஸ் என்ற பெயரே மக்களுக்கு மறக்கும் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அவரின் பாகுபலி கேரக்டர். இந்தி, தெலுங்கு, தமிழ் உட்பட இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் வெளியான இந்தப் படம் நாடு முழுவதும் ரிலீஸானது.

டிவிட்டரில் வாழ்த்து

டிவிட்டரில் வாழ்த்து

இதனால் பிரபாஸ்க்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இதனை முன்னிட்டு அனைத்து மொழி ரசிகர்களும் பிரபாஸ்க்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியளவில் டாப்

இந்தியளவில் டாப்

டிவிட்டரில் #HappyBirthdayDarling என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி ட்ரென்ட்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

வாழ்க டார்லிங்

கடின உழைப்பு, எளிமை.. நட்பாக பழக்ககூடியவர், ரசிகர்களை நேசிப்பவர், எங்களின் டார்லிங்கே அகில இந்திய சூப்பர் ஸ்டார்.. எதிர்காலத்தில் உங்களின் அனைத்து புராஜெக்ட்டுகளும் பாகுபலியை விட பெரும் வெற்றி பெற வாழ்த்துகள். பல்லாண்டு வாழ்க டார்லிங்.. என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஈகோ இன்றி

அன்பு எதையும் தாங்கும் ஈகோ இன்றி.. பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங்... என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மேடம் டுசாட்ஸ்

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் முதல் மெழுகு சிலை வைக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் பிரபாஸ்தான். அவர் எவ்வளவு பிரபலமான நடிகர் என்பதை இது காட்டுகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X