ஆதி புருஷ் டீசரை பார்த்தபோது நானும் குழந்தையாக மாறிவிட்டேன்.. பிரபாஸ் கமெண்ட்!

ஐதராபாத் : சில தினங்களுக்கு முன்பு வெளியான ஆதி புருஷ் டீசர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இவையனைத்தையும் சரிசெய்து மீண்டும் டீசரை வெளியிடும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இதனிடையே இந்த டீசரை 3டி எபக்டில்தான் பார்க்க வேண்டும் என்று முன்னதாக டைரக்டர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார்.

ஆதி புருஷ் படம்

ஆதி புருஷ் படம்

பிரபாஸ், கிரீத்தி சனோன், சாயிப் அலிகான் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஆதி புருஷ் படம். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 5 மொழிகளில் வெளியான இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து அதேவேகத்தில் 100 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை மேற்கொண்டது.

சர்ச்சைகளை ஏற்படுத்திய டீசர்

சர்ச்சைகளை ஏற்படுத்திய டீசர்

அதே நேரத்தில் இந்த டீசர் அதிகமான சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது. பாலிவுட்டின் சிறப்பான இயக்குநரான ஓம் ராவத் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் சுமாராக இருப்பதாகவும் கார்ட்டூன் சேனலில் தொடர்களை பார்ப்பது போல இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இயக்குநர் விளக்கம்

இயக்குநர் விளக்கம்

இதையடுத்து இந்தப் படம் திரையரங்குகளில் 3டி வடிவத்தில் பார்க்கும் வகையில் உருவாகியுள்ளதாகவும் மொபைலில் பார்ப்பதால், அந்த சிறப்பான அனுபவம் கிடைக்காது என்றும் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் டீசரை முதன்முறையாக 3டி வடிவத்தில் பார்த்துள்ள பிரபாஸ், 3டி வடிவத்தில் டீசரை பார்த்தபோது தானும் குழந்தையாக மாறி பரவசம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

3டி வடிவத்தில் டீசர்

3டி வடிவத்தில் டீசர்

இந்த டீசரை ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் பார்வைக்காக வெளியிட திட்டமிட்டுள்ளதாக பிரபாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் என்றும் அதற்காக ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரபாஸ் மேலும் கூறியுள்ளார்.

 காத்திருக்கும் சர்ப்ரைஸ்

காத்திருக்கும் சர்ப்ரைஸ்

அடுத்த 10 நாட்களுக்கு இந்தப் படம் குறித்த பல சர்ப்ரைஸ் கண்டெண்டுகளை வழங்கவுள்ளதாகவும் பிரபாஸ் குறிப்பிட்டுள்ளார். படத்தின் ரிலீஸ் வரை படங்களின் சர்ப்ரைசை ஹீரோக்கள் சொல்லாமல் இருக்கும் நிலையில், தனது படத்தின் சர்ப்ரைஸ் கன்டெண்டுகளை அடுத்தடுத்து கூறவுள்ளதாக பிரபாஸ் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X