சாஹோ படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஒரு நிமிஷம் தல சுத்திடும்!

சென்னை: சாஹோ படத்திற்காக நடிகர் பிரபாஸ் பெத்த அமொவுன்ட்டை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் சாஹோ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபலி இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பிரபாஸ் நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தை சுஜித் இயக்கியிருக்கிறார். பிரபாஸ், ஸ்ரத்தாவை தவிர்த்து மந்திரா பேடி, ஜாக்கி ஷரோப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் உள்ளிட்டோரும் சாஹோ படத்தில் நடித்துள்ளனர்

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியானது. சாஹோ டீசருக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

காதல் - ஆக்ஷன்

காதல் - ஆக்ஷன்

சாஹோவில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தாக கபூர் நடித்துள்ளார். காதல், ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது சாஹோ.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் இந்த படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். சாஹோ படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 100 கோடி சம்பளம்

ரூ. 100 கோடி சம்பளம்

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக சம்பளம்

இந்தியாவிலேயே அதிக சம்பளம்

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரஜினிகாந்த், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோரை வீழ்த்தி அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்று பெருமையை பெறுவார் பிரபாஸ்.

வருமானத்திலும் ஷேர்

வருமானத்திலும் ஷேர்

ஆனால் இந்த தகவல் குறித்து நடிகர் பிரபாஸோ அல்லது தயாரிப்பாளரோ இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் படத்திற்கு பிக்ஸடு சம்பளமாக ஒரு பெரிய தொகையை பெற்றுள்ளார் என்றும் பல மொழிகளில் வெளியாகும் படத்தின் வருமானத்திலும் ஒரு ஷேர் உண்டு என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X