Prabhas: கமல் மாதிரியே வேணும்னு அடம்பிடிப்பேன்.. சிறுவயது அனுபவம் பகிர்ந்த பிரபாஸ்!

ஐதராபாத்: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. அந்த வகையில் படத்தின் பிரமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் என இரு லெஜண்ட்களுடன் இணைந்து தான் நடித்தது மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறுவயதில் தான் கமல்ஹாசனை போலவே ஸ்டைல் செய்து கொள்ள ஆசைப்பட்டு தன்னுடைய பெற்றோரிடம் அடம் பிடித்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Actor Prabhas hails Kamal haasan and his dressing style

கல்கி 2898 ஏடி படம்: இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி ஐதராாத்தில் படத்தின் பிரமோஷனல் நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

பிரபாஸ் உற்சாகம்: இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு லெஜண்ட்களுடன் இணைந்து பணியாற்றியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று பிரபாஸ் பெருமை தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில் மட்டுமில்லாமல் தென் மாநிலங்களிலும் அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளதை குறிப்பிட்ட அவர், அவருடன் இணைந்து நடித்தது குறித்து பெருமை கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல கமல்ஹாசன் மிகப்பெரிய நடிகர் என்று தெரிவித்துள்ள பிரபாஸ், இந்த இருவருக்கும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். இதனிடையே தன்னுடைய சிறுவயதில் கமல்ஹாசனை போல உடை அணிந்து தன்னைத்தானே அலங்காரம் செய்து கொள்வேன் என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

பெற்றோரிடம் அடம்பிடித்த பிரபாஸ்: குறிப்பாக 1983ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சாகர சங்கமம் படத்தில் அவர் அணிந்திருந்த உடைகளை போல நானும் தைத்து அணிந்து கொள்ள முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற உடைகளை வாங்கித் தருமாறு தன்னுடைய பெற்றோரிடம் அடம் பிடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோன் மிக அழகான நடிகை என்றும் சர்வதேச திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வரும் அவர், இந்த படத்தில் நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்து பிரபாஸ்: மகாபாரத காலத்தில் ஆரம்பித்து கிபி 2898ம் ஆண்டில் இந்த கதை முடிவடைவதாக கதைக்களம் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் புஜ்ஜி படத்தில் பயன்படுத்திய மிகப்பெரிய காரின் சுவரை உடைத்துக் கொண்டு பிரபாஸ் இறங்குவதாக காணப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபாஸிடம் திருமணம் குறித்து அவர் பதிவிட்டிருந்த பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த பிரபாஸ், அவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டு தன்னுடைய பெண் ரசிகைகளின் மனதை காயப்படுத்த மாட்டேன் என்று கிண்டலாக பதிலளித்ததை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X