Prabhas: ரூ. 500 கோடிகளை அசால்ட்டாக அள்ளும் பிரபாஸ்.. பாக்ஸ் ஆஃபீஸில் கலக்கிய பிரபாஸ் படங்கள்!

சென்னை: இந்திய சினிமாவில் ஒரு படம் வெளியாகும்போதே அதனை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என டைட்டில் கார்டில் குறிப்பிடப்பட்டு வெளியான முதல் படம் கல்கி 2898 ஏ.டி படம்தான். இந்த படத்திற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்றப்பட்டது. குறிப்பாக படத்தில் பாக்ஸ் ஆஃபீஸ் நாயகன் என பெயர் பெற்ற பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதுடன் உலகநாயகன் கமல் ஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் படம் உருவானதால் படத்திற்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுவும் படத்தில் கமல்ஹாசன் வில்லன் என்றதும் அவரது ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துக் கொண்டு இருந்தனர்.

Prabhas Salaar

படத்தினை தொன்மையான தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டினை கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு பொருட்செலவு செய்து கல்கி 2898 ஏ.டி படத்தினை தயாரித்துள்ளது. படத்தினை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் பாகத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு பாராட்டப் படுகின்றதோ அதே அளவிற்கு சந்தோஷ் நாராயணனின் இசையும் பாராட்டப்படுகின்றது.

Prabhas Salaar

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தபடம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியானது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் ப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் ரூபாய் 37 கோடிகளை வசூல் செய்தது. இந்தியாவில் இந்த படம் முதல் நாளில் சுமார் 10 ஆயிரம் ஸ்கீரின்களில் திரையிடப்பட்டது. படத்திற்கு முதல் நாள் டிக்கெட் விலை மும்பையில் இதுவரை எந்த இந்திய படத்திற்கும் உயர்த்தப்படாத அளவிற்கு, ரூபாய் 1500இல் இருந்து ரூபாய் 2300 வரை உயர்த்தப்பட்டது.

உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படத்தின் டிக்கெட்டுகளின் விலை ரூபாய் 75இல் இருந்து ரூபாய் 125 வரை உயர்த்தப்பட்டது. இப்படியான நிலையில் படம் ரிலீஸ் ஆனது. படம் மகாபாரதக் கதையுடன் தொடங்கி, சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் கதையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. தெய்வ சக்திக்கும் அறிவியல் வளர்ச்சிகும் இடையில் நடைபெறும் பெறும் போராக படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு படம் பக்காவான விசுவல் ட்ரீட்டாக அமைந்தது.

Prabhas Salaar

500 கோடிகள்: படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 191.5 கோடிகளை வசூல் செய்தது. இரண்டாவது நாளில் முதல் இரண்டு நாட்களையும் சேர்த்து ரூபாய் 298.5 கோடிகளை வசூல் செய்தது. மூன்றாவது நாளில் மூன்று நாட்களையும் சேர்த்து ரூபாய் 415 கோடிகளை வசூல் செய்திருந்தது. இந்த தகவலை படகுழுவே அறிவித்திருந்தது. இதுமட்டும் இல்லாமல் நேற்று அதாவது ஜூன் 30ஆம் தேதி படக்குழு தரப்பில் இருந்து எக்ஸ் பக்கத்தில் 500 கோடிகளை படம் வசூல் செய்வதைக் குறிப்பிடும் வகையில் 500 கோடிகள் என பதிவிடப்பட்டு இருந்தது.

Prabhas Salaar

ஓடிடி விபரம்: படம் வெளியாகி நான்கே நாட்களில் 500 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூபாய் 175 கோடிகளுக்கு வாங்கியது. இதனை வைத்துப் பார்க்கும்போது படம் இதுவரை ரூபாய் 675 கோடிகளை வசூல் செய்துள்ளது தெளிவாகியுள்ளது. இதில் நான்காவது நாள் வசூல் இந்தியாவில் எவ்வளவு என்பது குறித்து படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் விபரங்களை வெளியிடும் சாக்நிக் நிறுவனம் தோராய வசூல் விபரத்தினை வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்கி 2898 ஏ.டி படம் நான்காவது நாளில் இந்தியா முழுவதும் 85 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறியுள்ளது.

Prabhas Salaar

500 கோடிகளக் கடந்த பிரபாஸ் படங்கள்: பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் முதல் பாகம் ரூபாய் 600இல் இருந்து 650 கோடிகளை வசூல் செய்தது. இரண்டம் பாகம் ரூபாய் 1788 கோடிகளை வசூல் செய்தது. அதேபோல் சலார் படத்தின் முதல் பாகம் 615 கோடிகளை வசூல் செய்தது. இப்படியான நிலையில் கல்கி 2898 ஏ.டி படமும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதால் பிரபாஸ் படங்கள் தொடர்ந்து ரூபாய் 500 கோடிகளைக் கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இதில் ஆதிபுருஷ் மட்டும் 393 கோடிகளை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X