Salaar: அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போன சலார் பட ரிலீஸ்.. எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் பிரபாஸ் -பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சலார். கேஜிஎப் படங்களை தொடர்ந்து இந்தப் படத்தை பிரஷாந்த் நீல் இயக்கி முடித்துள்ளார்.

இந்தப் படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

படத்தை ரசிகர்களுக்கு மிகச்சிறப்பாக கொடுக்க வேண்டிய நிலையில், அதற்கான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Actor Prabhas -Prashanth neel combination movie Salaar release date postponed to next year

அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போன பிரபாஸின் சலார் பட ரிலீஸ்: நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார். கேஜிஎப் படங்களை கொடுத்து இந்திய அளவில் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார் பிரஷாந்த் நீல். நடிகர் யாஷை வைத்து கேஜிஎப் படங்களை கொடுத்த அவர், தற்போது பிரபாசுடன் சலார் படத்தில் களமிறங்கியுள்ளார். இந்தப் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 28ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ரிலீசில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பரில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொங்கல் ரேசில் படம் பங்கேற்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

https://twitter.com/letscinema/status/1705457553822671078

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது சலார் படம். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. KGF யூனிவர்சில் இந்தப் படம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், படம் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகிறது. படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதத்தில் வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.

அடுத்தடுத்த பாகங்களாக உருவாகவுள்ள சலார் படத்தில் கேஜிஎப் படத்தின் பாதிப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகள் 350 கோடிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்தப் படத்தினை ரசிகர்களுக்கு சிறப்பாக கொடுக்க வேண்டிய அவசியத்தால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுக்காத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் பான் இந்தியா ஸ்டாராக வலம்வரும் பிரபாஸ் சலார் மற்றும் கல்கி படங்களை மிகவும் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். கல்கி படமும் முன்னதாக ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ள நிலையில், சலார் படமும் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X