ஆரம்பமானது ஆதிபுருஷ்.. மாஸ் அப்டேட் வெளியிட்ட பிரபாஸ்.. வேற லெவல் எதிர்பார்ப்பில் இந்திய சினிமா!

சென்னை: நடிகர் பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டமான படமான ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.

பாலிவுட்டில் வெளியான தான்ஹாஜி படத்தை இயக்கிய இயக்குநர் ஓம் ராவத் இந்த படத்தை இயக்குகிறார்.

ராமாயண கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்க உள்ளார். ராவணனாக பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்கிறார்.

பிரம்மாண்ட பிரபாஸ்

பிரம்மாண்ட பிரபாஸ்

மாஸ் டோலிவுட் நடிகர் என்கிற அந்தஸ்து மாறி தற்போது பிரம்மாண்ட பான் இந்தியா நடிகர் ஆகிவிட்டார் நடிகர் பிரபாஸ். இயக்குநர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படங்கள் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணம். 300 கோடிக்கு மேல படத்தோட பட்ஜெட்னா மட்டும் கதை சொல்ல வாங்க என்கிற ரேஞ்சுக்கு மாறி விட்டார்.

100 கோடி சம்பளம்

100 கோடி சம்பளம்

அக்‌ஷய் குமாரை போலவே நடிகர் பிரபாஸின் சம்பளமும் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி விட்டதாக டோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. அதனால், தான் குறைந்தது 250 கோடிக்கும் கீழ் படத்தின் பட்ஜெட் இருக்கக் கூடாது என்கிற கண்டிஷனுடன் நடித்து வருகிறாராம்.

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

ஷ்யாம்

நடிகை பூஜா ஹெக்டே உடன் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படம் காதல் படம் என்றாலும், அதிலும் பீரியாடிக் லவ் ஸ்டோரி என ஏகப்பட்ட பிரம்மாண்டமாகவே அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாம். சீக்கிரமே திரைக்கு ராதே ஷ்யாம் படம் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டும் சலார்

மிரட்டும் சலார்

கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சலார் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட உள்ளாராம். இந்த படமும் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாகவே உருவாகி வருகிறது.

ஆரம்பமானது ஆதிபுருஷ்

ஆரம்பமானது ஆதிபுருஷ்

இந்த படங்களுக்கெல்லாம் மேலாக, ராமாயண கதையை மையமாக வைத்து பாகுபலிக்கு பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட வரலாற்று படத்தில் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாரே, அந்த ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகி உள்ளது. இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமராக பிரபாஸ் அருள் பாலிக்க உள்ளார்.

சீதை யார்

சீதை யார்

இந்த படத்தில் ராவணனாக நடிகர் சைஃப் அலி கான் நடிக்கவிருக்கிறார். ராமராக நடிக்க வில் வித்தை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை பிரபாஸ் கற்றுக் கொண்டு வருகிறார். இன்னமும் இந்த படத்தில் சீதையாக நடிக்கப் போவது யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நடிகை கீர்த்தி சனோன் சீதையாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

பாகுபலி வசூலை தாண்டுமா

பாகுபலி வசூலை தாண்டுமா

ராமாயண கதையை ஆதிபுருஷ் என்கிற பெயரில் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக எடுக்க உள்ள நிலையில், இதன் பிசினஸ் உலகளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலியின் 2ம் பாகம் 1500 கோடி வசூலை எட்டிய நிலையில், பாகுபலி மற்றும் 2000 கோடி வசூல் ஈட்டிய ஆமீர்கானின் தங்கல் திரைப்பட பாக்ஸ் ஆபிஸ்களை இந்த படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X