அடேங்கப்பா.. பிரபாஸ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. லாங் வெயிட்டுக்கு எண்ட் கார்டு போட்ட படக்குழு!

மும்பை: பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில் மீண்டும் பழைய பாகுபலியாக அவர் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்ட வேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பிரபாஸின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஆதிபுருஷ் படம் எப்போ வெளியாக போகிறது என்பதை படக்குழுவினர் கூறியுள்ளனர்.

பாகுபலி மூலம் ஃபேமஸ்

பாகுபலி மூலம் ஃபேமஸ்


தெலுங்கு திரையுலகில் டார்லிங் நடிகராக வலம் வந்த பிரபாஸை உலகம் முழுவதும் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் மூலம் பிரபலமாக்கி விட்டார் இயக்குநர் ராஜமெளலி. பாகுபலி 2ம் பாகம் 1800 கோடி வசூல் செய்து ஒட்டுமொத்த இந்தியாவையும் வாய் பிளக்க வைத்த நிலையில், மிகப்பெரிய பட்ஜெட் நாயகனாகவே பிரபாஸ் மாறிவிட்டார்.

சுமார் 200 கோடி பட்ஜெட்டில்

சுமார் 200 கோடி பட்ஜெட்டில்

பிரபாஸை ஒரு படத்துக்கு புக் செய்ய வேண்டுமானால், அந்த படத்தின் பட்ஜெட் குறைந்த பட்சம் 200 முதல் 300 கோடி இருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகி விட்டது. அந்த அளவுக்கு அவரது மார்க்கெட் உலகளவில் உயர்ந்து விட்டது. சாஹோ, ராதே ஷ்யாம் படங்களும் பிரம்மாண்டமாகவே உருவாகின. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த படங்கள் பெறவில்லை.

பின் வாங்கிய ரிலீஸ்

பின் வாங்கிய ரிலீஸ்

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் ராமாயணம் கதையாக உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் இது என்ன அனிமேஷன் படமா? என்றும் அதன் கதாபாத்திரங்களையும் பயங்கரமாக ட்ரோல் செயய் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.

ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி

ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி

இந்நிலையில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக வெளியாக போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சலார் சம்பவம்

சலார் சம்பவம்

ஆதிபுருஷ் திரைப்படத்தின் சிஜி காட்சிகளை ஃபைன் ட்யூன் செய்ய மேலும், சில கோடிகளை செலவு செய்து பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளதாகவும் நிச்சயம் இந்த முறை ரசிகர்கள் அதிருப்தி அடைய மாட்டார்கள் என்றும் படக்குழு பெரும் நம்பிக்கையை வைத்திருக்கிறது. ஆனால், பிரபாஸ் ரசிகர்களின் மொத்த கவனமும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்துத் தான் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சலார் வெளியாகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X