காதல் ரேகையே இல்லாத பிரபாஸ்.. டைட்டானிக் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக மிரட்டும் ராதே ஷ்யாம் டிரைலர்!

சென்னை: டைட்டானிக் படம் போல பிரம்மாண்டமாக ஒரு காதல் படம் எடுக்க வேண்டும் என்பது பல இயக்குநர்களின் கனவாக இருக்கும். அந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார் ராதே ஷ்யாம் படத்தின் இயக்குநர் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

பான் இந்தியா நடிகர், பாக்ஸ் ஆபிஸ் பாகுபலி என பிரம்மிக்க வைக்கும் நடிகர் பிரபாஸ் மற்றும் பீஸ்ட் ஹீரோயின் புட்டபொம்மா பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

உலகத்திலேயே அதிசிறந்த கை ரேகை நிபுணருக்கு காதல் கைகூடுமா? கூடாதா? என்கிற கதையாக ராதே ஷ்யாம் உருவாகி உள்ளது.

ராதே ஷ்யாம் டிரைலர் ரிலீஸ்

ராதே ஷ்யாம் டிரைலர் ரிலீஸ்

நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் பிரம்மாண்டமான ரொமான்டிக் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. தியேட்டரில் டிரைலரை ரிலீஸ் செய்யும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

கை ரேகை நிபுணர்

கை ரேகை நிபுணர்

இந்த படத்தில் விக்ரமாதித்யா எனும் கதாபாத்திரத்தில் கை ரேகை நிபுணராக நடிகர் பிரபாஸ் மிரட்டி உள்ளார். பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெளியான பிரபாஸின் சாஹோ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜூலியட்

ஜூலியட்

நீ ரோமியோ இல்லை என்றாலும் நான் ஜூலியட் தான் என குறும்புத்தனம் மாறாத பெண்ணாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அல்லு அர்ஜுனின் அலா வைகுண்டபுறமுலோ கடந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், விஜய் உடன் பீஸ்ட், ராம்சரண் உடன் ஆச்சார்யா என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் புட்டபொம்மா.

சாமியாராக மாறிய கட்டப்பா

சாமியாராக மாறிய கட்டப்பா

பாகுபலி படத்தில் கட்டப்பாவாக கலக்கிய சத்யராஜும் ராதே ஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாமியார் வேடத்தில் நடித்துள்ளதை டிரைலரில் பார்த்ததும் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. லக்கி சார்ம் என்பதால் சத்யராஜை இந்த படத்திலும் இணைத்துக் கொண்டாரா பிரபாஸ் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டைட்டானிக் போல

டைட்டானிக் படத்தை போல பிரம்மாண்ட காதல் படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இயக்குநர் ராத கிருஷ்ணனுக்கு இருப்பது படத்தில் இடம்பெற்றுள்ள அந்த கப்பல் காட்சியை பார்த்தாலே தெரிகிறது. கையில் காதல் ரேகையே இல்லாத ஒரு மனிதனுக்கு காதல் கைகூடுகிறதா? இல்லை இதுவும் ஒரு ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி, டைட்டானிக் போல கடைசியில் காதலர்கள் பிரிந்து விடும் கதையா என்பதை வரும் ஜனவரி 14ம் தேதி திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ராஜமெளலியுடன் மோதல்

ராஜமெளலியுடன் மோதல்

2022ம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்திய சினிமாவில் மிகப்பெரிய கிளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ் திரையரங்குகளில் நடைபெற போகிறது. இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் வசூலை அப்படி தன் பக்கம் ராதே ஷ்யாம் மடைமாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X