''சலார்'' உணர்வுபூர்வமான படம்.. பிரபாஸ் மனம் திறந்த பேட்டி!
சென்னை: சலார் திரைப்படம் உணர்வுபூர்வமான படமாக இருக்கும் என்று பிரபாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். இந்த படத்தில் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன், மற்றும் ஜெகபதி பாபு எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரிலீஸுக்கு முன்பே பல கோடி வசூல்: பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படமும் ஏமாற்றத்தை கொடுத்ததால், சலார் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடி ரூபாய் வியாபாரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
ரூ.400 கோடி பட்ஜெட்: கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ரூ.400 கோடி இப்படத்தை உருவாக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 22ந் தேதி வெளியாக உள்ளது.
படத்திற்கான வேலை: இப்படம் குறித்து பேட்டி அளித்துள்ள பிரபாஷ், சலார் திரைப்படம் கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுபூர்வமான போராட்டத்தைச் சொல்லும் படமாக உருவாகி உள்ளது. மேலும் முதல்முறையாக ரசிகர்கள் படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக என்னைப் பார்ப்பார்கள். நானும் பிரசாத்தும் சேர்ந்தே படத்திற்கான வேலைகளை செய்தோம்,
சிறந்த இயக்குநர்: நான் அந்த கதாபாத்திரத்தை அணுகும் விதம் குறித்து, நாங்கள் ஓய்வெடுக்கும்போதும், வேடிக்கையாக, பேசும்போதும் விவாதிப்போம் வொர்க்ஷாப் செய்தோம் என்றார். சினிமாவிற்கு வந்த இத்தனை 21 ஆண்டுகளில், நான் பணிபுரிந்ததில் இவர்தான் சிறந்த இயக்குநர். படப்பிடிப்பு தளத்திற்கு ஸ்ருதி மற்றும் பிருத்வி போன்றவர்கள் வந்தவுடன் ஷீட்டிங் ஜெட் வேகத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் நடக்கும். நாங்கள் இருக்கும் போது எங்கள் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். பிரசாந்த் கதாபாத்திரம் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றார், அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











