காப்பான் படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் கூறிய பெரிய நன்றி! ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா உட்பட காப்பான் படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் வெளியாகி மெகா ஹிட்டானது. இதன் மூலம் பாகுபலி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் பெரும் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து 300 கோடி ரூபாய் செலவில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 15ந் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 30ல் ரிலீஸ்
இந்நிலையில் சாஹோ படத்தின் பணிகள் இதுவரை முழுமையடையாத நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 30ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளி வைப்பு
இதேபோல் நடிகர்கள் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிக்கும் காப்பான் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அந்த படத்தின் ரிலீஸும் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை
இந்நிலையில் மேலும் சில படங்கள் 30ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. இதைத்தொடர்ந்து சாஹோ படக்குழு காப்பான் உள்ளிட்ட பல்வேறு படக்குழுக்களுடன் பேசி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தது.

மீண்டும் தள்ளி வைப்பு
இதனை ஏற்றுக்கொண்ட காப்பான் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன. காப்பான் படம் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் நன்றி
இதற்காக நடிகர் பிரபாஸ், காப்பான் உட்பட ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த படங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் படங்கள் வெற்றி பெறவும் பிரபாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











