ராமராக நடிக்கும் ஆதிபுருஷ் படத்துக்காக.. வில்வித்தைப் பயிற்சி பெறுகிறார் பிரபல நடிகர் பிரபாஸ்!

By

சென்னை: தனது அடுத்தப் படத்தில் ராமராக நடிப்பதால் அதற்காக வில் வித்தைப் பயிற்சி பெற இருக்கிறார் நடிகர் பிரபாஸ்.

நடிகர் பிரபாஸ், பாகுபலியில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

பாகுபலி-க்குப் பிறகு அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது.

ராமாயணக் காவியம்

ராமாயணக் காவியம்

இதையடுத்து அவர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே, அவர் ஆதிபுருஷ் நடிக்க இருக்கிறார். இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் இருக்கிறேன்

ஆவலுடன் இருக்கிறேன்

இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 3டி-யில் உருவாகும் இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது. இதுபோன்ற ஒரு கேரக்டரை திரையில் கொண்டுவருவது பொறுப்புமிக்கது, பெருமைக்குரியது. இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

கிராபிக்ஸ் காட்சி

கிராபிக்ஸ் காட்சி

இந்தப் படத்தில் அவர் ராமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வில்வித்தை பயிற்சியை மேற்கொள்ளுமாறு இயக்குனர், பிரபாஸை கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே பாகுபாலி படத்துக்காக அந்த பயிற்சியை பெற்றிருந்தாலும் இந்தப் படத்துக்காக தீவிரமாக பயிற்சி பெற இருக்கிறார். ராதே ஷ்யாம் படத்துக்குப் பிறகு இந்த பயிற்சியை பெற இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்த்தில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X