ரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் பிரபாஸ் தீபிகா படுகோனுடன் நடிக்க உள்ள தனது அடுத்தப் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
லாக்டவுன் என்ற போதும் சினிமாத்துறை சம்பந்தமான பணிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. அவற்றில் சுவாரசியமான சில தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், விஜயசாந்தி புரடெக்ஷனில் நடிகர் பிரபாஸ் அடுத்து நடிக்கும் படத்திற்கு 100 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.
அடுத்து விஜயின் பள்ளிப் பருவ போட்டோவை ஷேர் செய்து கிண்டலடித்த மீரா மிதுனை, அவரது பள்ளி பருவ போட்டோவை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்த தகவலை கூறியுள்ளார்.
நுரையீரல் புற்று நோய் காரணமாக நடிகர் சஞ்சய் தத் சினிமாவை விட்டு விலகும் தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே. மேலும் இயக்குநர் கார்த்திக் ராஜ், 30 நாட்களில் பேய்ப்படம் எடுத்துள்ள தகவலையும் கூறியுள்ளார்.
மேலும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவரது மகனான எஸ்பி சரண் வீடியோ குறித்தும் இன்றைய டாப் 5 பீட்ஸில் கூறியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











